India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், சிவம் டூபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி 6 முறை 200+ ரன்களை எடுத்துள்ளது. இதில் 6 போட்டியிலும் சிஎஸ்கே அணியே வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் சென்னையின் வெற்றிப்பயணம் தொடருமா?
ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதனை பல ரேஷன் கடைகளில் பயன் படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. GPay மாதிரியான UPI சேவை நிறுவனங்கள் கூட்டுறவுத் துறையிடம் இருந்து கமிஷன் வசூலிப்பதால் அரசுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது. ஆகையால், UPI மூலம் பணம் பெற வேண்டாம் என்று ரேஷன் கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
10 ஆண்டுகளில் நாட்டை பாஜக பாதாளத்தில் தள்ளியிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்க பிரதமர் மோடி தயங்குவது ஏன்? இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள் விஸ்வகுருவா? மெளனகுருவா? என வினவிய அவர், தமிழகத்திற்கு தந்த எந்த வாக்குறுதியையும் மோடி நிறைவேற்றவில்லை எனவும் சாடினார்.
குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 206 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் 46, ருதுராஜ் 46 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய டூபே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டேரி மிச்செல் 24, ஜடேஜா 7 ரன்கள் எடுக்கவே சிஎஸ்கே 206/6 ரன்கள் எடுத்து. GT தரப்பில் ரஷித் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தர்மபுரி தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடும் சௌமியா அன்புமணி ₹60.23 கோடி சொத்து வைத்திருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு கோடியே 92 லட்சம் மதிப்பிலான 3 கிலோ தங்க நகைகள், ஒரு கோடியே 64 லட்சம் மதிப்பிலான 151 கேரட் வைர நகைகள், 20 லட்சம் மதிப்பிலான 26 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை சௌமியா வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ₹9 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மதிமுக தொடங்கிய நாளில் இருந்து வைகோவுக்கு பக்க பலமாக இருந்த கணேச மூர்த்தி, 3 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போது விஷமுறிவு சிகிச்சை எடுத்து வரும் அவரது உடல்நிலை குறித்து 48 மணி நேரத்திற்கு பிறகே கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
காங்கிரஸ் சார்பாக மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் ஆர். சுதா போட்டியிடுவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாகவும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மற்ற அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் கடைசியாக மயிலாடுதுறை தொகுதியையும் அறிவித்துள்ளது.
மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளருக்கு அளிக்கும் சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையாக விசாரணை நடத்தாமல் மாவட்ட பதிவாளர்கள் பத்திரத்தை ரத்து செய்வதால் பாதிக்கப்படுவதாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்.4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
திமுக மீது விமர்சனம் வைக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டதாக கூறியவர் இபிஎஸ். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது திமுக. திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் அவலங்களையும் எடை போட்டு மக்கள் தீர்ப்பளிப்பார்கள்’ என்றார்.
பாஜக அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். பாஜக குறித்து பேசிய அவர், “அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பாஜக அரசு நாடு முழுவதும் வசூல் செய்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், அது முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை” என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.