News March 26, 2024

BREAKING: சென்னை அணி அபார வெற்றி

image

GT அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற GT அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய GT அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

News March 26, 2024

உலக அழகிப் போட்டியில் கால்பதிக்கும் சவுதி அரேபியா

image

உலக அழகிப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு செப்டம்பரில் மெக்ஸிகோவில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் சவுதி அரேபியா சார்பில் 27 வயதாகும் மாடல் ரூமி அல்கஹ்தானி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

சிங்கப்பூர் சரக்குக் கப்பலை இயக்கிய இந்தியர்கள்!

image

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் மீது சிங்கப்பூர் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் பாலம் இடிந்ததால் அதில் பயணித்த கார்களும் ஆற்றில் விழுந்தது. ஆற்றில் விழுந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டனர். இதனிடையே கப்பலை இயக்கிய மாலுமி உள்பட 22 பேரும் இந்தியர்கள் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News March 26, 2024

சனியிடம் சிக்கப் போகும் ராசிகள்

image

மெதுவாக நகரும் கிரகமான சனி, 2025ஆம் ஆண்டு பெயர்ச்சி அடைய இருக்கிறார். கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் செல்லும் சனியால் சில ராசிகள் சிக்கல்களை அனுபவிக்கப் போகின்றனர். கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசியினர் மீதுதான் சனிப் பெயர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருக்கப் போகிறது. இந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

News March 26, 2024

இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல்

image

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கு இதுவரை 628 ஆண்கள், 109 பெண்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 405 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் மேலும் பலர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2024

மனைவியின் உயிரைப் பறித்த ஐபிஎல் கடன்

image

கடன் தொல்லை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தர்ஷன் பாபு, ஐபிஎல் போட்டியில் பந்தயம் கட்டுவதில் ஆர்வம் கொண்டவர். கடந்தாண்டு சுமார் ரூ.1 கோடி வரை பந்தயம் கட்டி தோற்றதால், கடன் கொடுத்தவர்கள் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலின் உச்சிக்கு சென்ற அவர், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

News March 26, 2024

தெரியாமல் வாங்கப்பட்டவரா இப்படி?

image

நடப்பு ஐபிஎல் தொடரில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷஷாங்க் சிங் என்பவரை பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்துக்கு மாற்றி வாங்கியது. வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்ளப்பட்ட அவர், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

News March 26, 2024

கனிமொழியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

image

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு ₹47 கோடியே 32 லட்சம் mathiaசொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக சொகுசு கார்களும் அடங்கும். 28 கோடியே 78 லட்சம் மதிப்பிலான ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளையும் 18 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும் கனிமொழி கணக்கில் காட்டியிருக்கிறார்.

News March 26, 2024

IPL: புதிய உலக சாதனை

image

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் பும்ரா 17 முறை 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இது வேறு எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையாகும். மொத்தம் 121 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் பும்ரா, இதுவரை 148 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

News March 26, 2024

நாம் தமிழருக்கு மைக் சின்னம் தான்

image

நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சி கேட்டுப் பெற்றுவிட்டதால் நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனை எதிர்த்து, வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நாதக முறையிட்டிருந்தது. அதனை ஏற்க மறுத்திருக்கும் தேர்தல் ஆணையம், மைக் சின்னத்தை இறுதி செய்துள்ளது.

error: Content is protected !!