News November 10, 2025

உண்மையான அட்டைக் கத்தி உதயநிதி: லயோலா மணி

image

என்ன போராட்டம், என்ன தியாகம் செய்துள்ளீர்கள்? எதற்கு உங்களுக்கு திமுக இளைஞரணி பதவி என DCM <<18244386>>உதயநிதிக்கு<<>> தவெக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் லயோலா மணி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையான அட்டை கத்தி உதயநிதிதான் என்ற அவர், போய் அடுத்த படத்திற்கு ரிவ்யூ கொடுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும், எமர்ஜென்சியை பார்த்த திமுக, கடைசியில் அதை கொண்டு வந்த இந்திரா காந்தியிடம் அடிமையாக கிடந்தது என்றும் கூறியுள்ளார்.

News November 10, 2025

BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

தங்கம் விலை இன்று(நவ.10) சவரனுக்கு ₹880 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹11,410-க்கும், சவரன் ₹91,280-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளதால், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

News November 10, 2025

ஜார்க்கண்டில் I.N.D.I.A கூட்டணி உடைகிறதா?

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இதில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும்( ஜேஎம்எம்) இடம் பெற்றது. ஆனால், அக்கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதிப்ய குமார், இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி, காங்., உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார்.

News November 10, 2025

அதிக லைக்ஸ் பெற்ற இன்ஸ்டா பதிவுகள் இவைதான்!

image

இன்றைய உலகம் இன்ஸ்டாகிராமில் தான் வசித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான போஸ்ட்களை பார்க்கிறோம். ஆனால், உலக மக்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்து, அதிக Likes பெற்ற போஸ்ட் எது என்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த போட்டோ, அதிக Likes-ஐ பெற்றுள்ளது என பாருங்கள். இதில், நீங்க எந்த போஸ்டுக்கெல்லாம் Like போட்டிருக்கீங்க?

News November 10, 2025

EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை: உதயநிதி

image

திமுக அறிவுத் திருவிழாவை நடத்தியுள்ளது, அதிமுக அடிமைத் திருவிழா நடத்தலாம் என DCM உதயநிதி விமர்சித்துள்ளார். EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை என சாடிய அவர், அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு பாசிச பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவ பார்க்கிறது என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, CM ஸ்டாலின் மீண்டும் CM ஆக பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.

News November 10, 2025

‘அரசன்’ படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

image

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ப்ரோமோவின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து படத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இச்சூழலில்தான், ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன், படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்கும் என கூறியிருக்கிறார்.

News November 10, 2025

30% வாக்காளர்களை காணோம்: கடம்பூர் ராஜூ

image

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.

News November 10, 2025

சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

image

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ✤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.

News November 10, 2025

தமிழகத்தில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

image

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்ட மாங்காடு நகராட்சியில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்போது, 34 வகையான கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.

News November 10, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

கரூரில் அதிமுகவிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதுப்பாளையம், ஒத்தையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக, தவெக, தேமுதிகவினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். நேற்று முன்தினம் <<18233598>>திமுக மாவட்ட நிர்வாகிகள்<<>> சிலர் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக போட்டி போட்டு மாற்றுக் கட்சியினரை இழுத்து வருகின்றன.

error: Content is protected !!