News March 28, 2024

தனுஷ் உடன் கைகோர்க்கும் ராஜ்குமார்

image

நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அவரது 52 ஆவது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, படப்பிடிப்பின்போது கிடைத்த இடைவெளியில் தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறார். ராஜ்குமார் கதை சொன்ன விதம் தனுஷுக்கு பிடித்துப்போக ‘இளையராஜா’ பயோபிக் படத்தை முடித்த பிறகு தேதி கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்.

News March 28, 2024

அருணாச்சல் முதல்வரின் சொத்து 100% அதிகரிப்பு

image

அருணாச்சல் பிரதேச பாஜக முதல்வர் பெமா காண்டுவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 100% அதிகரித்துள்ளது. அருணாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாண பத்திரத்தில் ரூ.277 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2019 தேர்தலில் ரூ.132 கோடி சொத்து இருப்பதாக கூறியிருந்தார். அதனுடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகமாகும்.

News March 28, 2024

பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள்

image

மும்பை அணியின் பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள் என்று அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். SRH அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய அவர், “பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த ஆடுகளம், பவுலிங்கிற்கு கடினமாக இருந்தது. 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம் என்றால் எந்த அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்” என்றார்.

News March 28, 2024

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி காலமானார்

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார். 2019 தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், மதிமுகவின் தீவிர விசுவாசியும், வைகோவின் நெருங்கிய நண்பரும் ஆவார். 2024 தேர்தலில் மீண்டும் சீட் தராததால் அதிருப்தியில் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அதிகாலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

News March 28, 2024

சிவாஜியை எச்சரித்த துரைமுருகன்

image

அரசியல் மேடைகளில் பேசும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற திமுக பேச்சாளர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கண்டிப்புடன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், “பொது மேடைகளில் கொள்கைகளை நாம் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவரை இழித்தும் பழித்தும் பேசுவது சரியானதல்ல. நம்மை அழிக்க நினைக்கும் பாஜகவினரை கூட எந்த இடத்திலும் தகாத வார்த்தைகளால் பேசக் கூடாது” என்றார்.

News March 28, 2024

பாப் மார்லியின் பொன்மொழிகள்!

image

✍நீங்கள் வாழும் வாழ்க்கையை நேசியுங்கள்; நீங்கள் நேசிக்கும் வாழ்க்கையை வாழுங்கள். ✍அரசியல் மற்றும் தேவாலயம் இரண்டும் ஒன்றே; இரண்டும் மக்களை அறியாமையில் வைத்திருக்கின்றன. ✍ஏதோ ஓர் இடத்தில் தொடங்குங்கள்; இல்லையென்றால், நீங்கள் எப்போதுமே தொடங்க மாட்டீர்கள். ✍ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விதியைத் தீர்மானிக்க உரிமை உண்டு. ✍மக்கள் தமது பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை உருவாக்க, ஒரு புரட்சி தேவைப்படுகிறது.

News March 28, 2024

பாண்டியாவை மும்பை வீரர்கள் பழிவாங்குகிறார்களா?

image

ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே மும்பை வீரர்கள் பழிவாங்குகிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். SRH-க்கு எதிரான போட்டியில் 2ஆவது முறையாக MI தோல்வியை சந்தித்தது. ஐந்து முறை கோப்பையை வென்ற MI இதைவிட மோசமாக விளையாட முடியுமா? என கேட்கும் வகையில் அந்த அணி வீரர்கள் விளையாடினர். கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை நீக்கியதன் விளைவு இது என பலரும் வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

News March 28, 2024

பா.ரஞ்சித் வழியில் விஜய் ஆண்டனி

image

J.பேபி போன்ற படங்களை OTT நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடுவதற்கு முன்னரே ரிலீஸ் செய்து காட்டியவர் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித். அவரது வழியில், தான் நடித்த படங்களையும் தைரியமாக வெளியிட நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடைய நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகும் ‘ரோமியோ’ படம் OTT ஒப்பந்தத்துக்கு முன்னரே ரிலீஸாகிறது.

News March 28, 2024

₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

image

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இம்முடிவை அரசு இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப, 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில், தேதி குறிப்பிடப்பட்ட கடன் பத்திரங்கள், தங்க பசுமை பத்திரங்கள் உள்ளிட்டவை வாயிலாக இந்த நிதியை திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.

News March 28, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் – 28 | பங்குனி – 15
▶கிழமை: வியாழன் ▶திதி: திரிதியை
▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 12:30 – 01:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 01.30 – 03.00 வரை
▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை
▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை
▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

error: Content is protected !!