India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா , கர்நாடகா, புதுச்சேரி) இன்று முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சஞ்சு சாம்சனை Trade மூலம் வாங்க, CSK ஜடேஜாவை RR-க்கு கொடுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த Trade பேசி முடிவடையாத நிலையிலும், CSK ரசிகர்கள் அணி நிர்வாகத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து CSK அணியின் முக்கிய பங்காற்றி வரும் ஜடேஜாவை கொடுக்கவே கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். பேட்ஸ்மேன் சஞ்சுவுக்கு, ஆல்ரவுண்டர் ஜடேஜாவை கொடுப்பது சரியா?

Stair tricep dips வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இதனை செய்வதால், மார்பு, தோள்பட்டை & கைகள் வலுப்படும். ➤செய்முறை: படிக்கட்டின் விளிம்பில் கைகளை உங்கள் தோள்களுக்கு நேராக வைத்து, கால்களை மடக்கி தரையில் ஊன்றி இருக்கவும்.(படத்தில் உள்ளது போல). கைகளில் அழுத்தம் கொடுத்து, உடலை இறக்கி, மீண்டும் தொடக்க நிலைக்கே கொண்டு வரவும். இப்படி 10- 15 முறை 2 செட்களாக செய்யலாம். SHARE IT.

அரசையும், திமுகவையும் விமர்சிக்கும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் பொதுக்குழுவில் விஜய் தான் CM வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு விட்டதால், அதிமுக – தவெக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தேவையில்லாமல் விஜய்யை டென்ஷனாக்கி அதிமுக கூட்டணிக்கு செல்ல வைத்து விடக்கூடாது என்பதால் இந்த ரகசிய உத்தரவாம்.

நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம், அதனால் தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை கட்ட விரும்பியிருந்தால், அக்கட்சியை ஆதரித்து இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்கைக்குதான் ஆதரவு, கட்சிக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.

*அக்டோபரில் மின்சார கார்கள் விற்பனை 57.50%ஆக உயர்வு. *மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருள்களை விற்றதன் மூலம் ₹800 கோடி வருவாய். *நாட்டில் நிலக்கரி உற்பத்தியை, அடுத்த ஆண்டில் 875 டன் வரை அதிகரிக்க திட்டம். *அந்நிய செலாவணி கையிருப்பு ₹61 லட்சம் கோடியாக சரிவு. *2030-க்குள் இந்தியாவின் டீப் -டெக் சந்தை மதிப்பு ₹2.66 லட்சம் கோடியாக உயரும் என தகவல்.

சில பறவைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆயுள் முழுவதும் தங்கள் இணைகளுடனே சேர்ந்து வாழ்கின்றன`. அவற்றின் வாழ்வில் காணப்படும் நம்பிக்கையும், ஒருவரை ஒருவர் காக்கும் பொறுப்புணர்வும் நெகிழ்ச்சியடைய செய்கின்றன. இந்த இயற்கையில் அற்புதமான வரம் பெற்ற பறவைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாற்றுக்கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் சிவநாதன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சிவநாதனும் வெளியேறியுள்ளார்.

ரஜினியுடன் இணையும் படத்திற்கு முன்பாக, ஒரு படத்தில் நடித்து முடிக்க கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதுதொடர்பாக, சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சண்டை கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.