News November 8, 2025

தினமும் இந்த பழங்களை சாப்பிடலாம்

image

இந்தப் பழங்கள் வெறும் சுவையானவை மட்டுமல்ல, உங்கள் உடல் விரும்பும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. என்னென்ன பழங்கள், நம் அன்றாட ஆரோக்கியத்தில் பங்களிக்கின்றன என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE பண்ணுங்க. இவை தகவலுக்காக மட்டுமே. ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகவும்.

News November 8, 2025

BREAKING: துரைமுருகன் விலகலா..?

image

திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது விலகலுக்கு பிறகு ஜெகத்ரட்சகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக்கவும் திமுக திட்டமிட்டு வருகிறதாம்.

News November 8, 2025

அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷுக்கு DSP பதவி

image

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவருக்கு, அம்மாநில CM மம்தா பானர்ஜி தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கா பூஷன் என்ற மாநில அரசின் உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அதேபோல் அவருக்கு டிஎஸ்பி பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கெனவே தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவியை UP அரசு வழங்கியிருந்தது.

News November 8, 2025

SIR பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம்

image

SIR பணியின் போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ என்று யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் <>http://erolls.tn.gov.in/blo <<>>என்ற இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.

News November 8, 2025

குழந்தைகளை காய்கறிகளை சாப்பிடவைக்க டிரிக்ஸ்

image

தற்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்காமல், நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை சாப்பிடவைக்க சில டிரிக்ஸ் இருக்கு. ➤காய்கறிகளை அரைத்து சாப்பாட்டில் சேர்க்கலாம் ➤பிடித்த பழங்களை கொடுங்கள் ➤காய்களை பொம்மைகள் போல கிரியேட்டிவ்வாக வெட்டி சமைத்து கொடுக்கலாம் ➤சாப்பாட்டிலிருந்து எடுக்கமுடியாத அளவுக்கு பொடி பொடியாக காய்களை வெட்டி உணவில் சேருங்கள். SHARE.

News November 8, 2025

சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான ஒன்றியச் செயலாளர் பொன்.சிவா மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி சி.வி.சண்முகம் வரவேற்றார். <<18233598>>திமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள்<<>> EPS முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

image

500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்து உடலை காக்கும் உன்னத உறுப்பாக இருப்பது கல்லீரல். ஆனால், நமது சில தவறான பழக்கங்கள் மற்றும் உணவு முறையால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் பாதித்தாலே உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கிவிடும். எனவே, கல்லீரலை காக்க தவிர்க்க வேண்டிய உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். swipe செய்து பார்த்துவிட்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 8, 2025

மூச்சு முட்டும் டெல்லி காற்று… அதிகரித்த மாசுபாடு

image

தலைநகர் டெல்லி காற்றுமாசால் மோசமாக திணறி வருகிறது. இன்று அங்கு பல்வேறு இடங்களில் காற்றுமாசு (AQI) ‘மிக மோசமான’ அளவான 400-ஐ தாண்டியுள்ளது. பனியுடன் காற்றின் நுண்ணிய தூசுகளும் சேர்ந்துகொள்ள, காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலை சமாளிக்கும் விதமாக அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைப்பது, வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

News November 8, 2025

CINEMA ROUNDUP: ஆஸ்கரில் திரையிடப்படும் மம்முட்டி படம்

image

* சித்தார்த் நடிக்கும் புதிய படத்துக்கு ரவுடி அண்ட் கோ என பெயரிடப்பட்டுள்ளது. *ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், பிப்ரவரி 12-ம் தேதி மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படம் திரையிடப்படுகிறது. *ராதிகா ஆப்தேவின் ‘சாலி மொஹப்பத்’ நேரடியாக OTT-ல் வெளியாகிறது. *சிம்புவின் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் நவ.24-ம் தேதி தொடங்குகிறது. *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 2.07 மணிக்கு வெளியாகிறது.

News November 8, 2025

‘நாகேந்திரன் இறக்கவில்லை’ ஆம்ஸ்ட்ராங் சகோதரர் புகார்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை என சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் இறக்கவில்லை என்றும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் கடந்த அக்.9-ம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!