News March 17, 2024

பாஜகவால் நாட்டுக்கு அச்சுறுத்தல்

image

பாஜகவை தோற்கடிப்பதே I.N.D.I.A. கூட்டணியின் ஒரே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதிலிருந்து நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்களை பிரித்தாலும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

News March 17, 2024

படங்களுக்கு தமிழ் பெயர் வையுங்கள்

image

முடிந்தவரை படங்களுக்கு தமிழ் பெயர்களை வையுங்கள் என திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார். இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அவர், “படங்களுக்கு தமிழ் மொழியை தாண்டி வேறு மொழியில் பெயர் வைப்பதில் எனக்குமே உடன்பாடு இல்லை. OTT தளங்களில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுவதால், படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வணிக நோக்கமே முழு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்கவில்லை

image

தேர்தல் பத்திரங்கள் மூலமாக எந்த நிறுவனத்திடம் இருந்தும் நிதியுதவி பெறவில்லை என தேமுதிக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் எதையும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

News March 17, 2024

டெல்லி அணி பேட்டிங் தேர்வு

image

மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. WPL தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அரையிறுதி ஆட்டங்களில் டெல்லி, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் லேன்னிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

News March 17, 2024

இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய தலைவர் தேர்வு

image

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க புதியத் தலைவராக ஆர்.வி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024-26ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 27 பதவிகளுக்கு சென்னை வடபழனியில் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய தலைவரான ஆர்.கே. செல்வமணி மீண்டும் போட்டியிடவில்லை. இதனால் தலைவராக ஆர்.வி. உதயகுமார், துணைத் தலைவர்களாக அரவிந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் போட்டியின்றி தேர்வாகினர்.

News March 17, 2024

“திமுக பெற்றது பாவப்பணம்”

image

மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் வாங்கியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். FUTURE GAMINGS நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு ₹509 கோடி வழங்கியுள்ளது. இதனை X தளத்தில் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றுள்ள திமுவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

பார்த்திபன் ட்வீட்டுக்கு சேரன் பதில்

image

இழந்த காதலி, காதலனை திருமணத்துக்குப் பிறகு பார்த்தால் நீங்கள் பேச நினைப்பது என்ன? என தனது X பக்கத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் சேரன், “உன்னோட வாழ்க்கை நல்லா இருக்குன்னு நம்புறேன். உன்னோட நினைவுகள் எனக்குள்ள பத்தரமா இருக்கு.. உன் குரல் மட்டும் எங்கேயோ கேட்காம போச்சு.. அப்பப்போ பேசு.. அது போதும்.. லவ் யூ” எனப் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

News March 17, 2024

விவரங்களை தாமாக முன்வந்து வெளியிட்ட கட்சிகள்

image

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பத்திர விவரங்களை தாமாக முன்வந்து அளித்திருக்கின்றன. தேர்தல் பத்திரம் மூலம் திமுக 656 கோடியும், அதிமுக 6 கோடியும் நன்கொடையாக பெற்றதை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அவை யார் யாரிடம் இருந்து பெறப்பட்டவை என்ற விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. பாஜக யாரிடம் இருந்து பணம் பெற்றது என்ற தகவல்களை வெளியிடவில்லை.

News March 17, 2024

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS

image

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு Savings Plus என்ற புதிய கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் வங்கி தானாகவே அதனை Fixed Depoistக்கு மாற்றிவிடும். அதன்மூலம் அதிக வட்டி கிடைக்கும்.

News March 17, 2024

வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள்

image

இந்தியா வளர்ச்சியடைய 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள், வளர்ந்த ஆந்திராவுக்கு 400 இடங்கள் என மொத்த நாடும் கூறுவதாக தெரிவித்தார். ஆந்திராவில் பாஜக கூட்டணியில் TDP, பவண் கல்யாண் கட்சிகள் உள்ளன.

error: Content is protected !!