India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த வாரம் உச்சம் சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை மெல்லமெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.80,000க்கும் விற்பனையாகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகப்போவதில்லை என தெரிவித்துள்ளார். டெல்லி ஜல் போர்டு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு நேற்று சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு வரமாட்டார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மீண்டும் ஏன் நோட்டீஸ் அனுப்பினார்கள்? ED சம்மன் சட்டவிரோதமானது என AAP தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தின் நிலைமையை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால், அவரது உடன்பிறப்புகளான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் மற்றும் மிசா பார்தி ஆகியோரை தொடர்ந்து, அரசியலுக்கு வரும் யாதவ் குடும்பத்தின் நான்காவது வாரிசாக ஆச்சார்யா இருப்பார்.
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ( 9.40 AM) மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,524 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 61 புள்ளிகள் சரிந்து 21,961 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும், பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காற்றுமாசு அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், டூவிலருக்கு ₹10,000, இலகுரக மூன்று சக்கர வாகனத்திற்கு ₹25,000 (இ-ரிக்ஷாக்கள் போன்றவை), கனரக மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹50,000 (ஆட்டோக்கள் -வணிக அலகுகள் போன்றவை) வரை மானியம் வழங்குகிறது.
NEET UG-2024 விண்ணப்பங்களை திருத்த NTA வாய்ப்பளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11:50 வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அதன் பிறகு எடிட் ஆப்ஷன் வழங்கப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தேர்வு மே 5 ஆம் தேதி ஆஃப்லைன் முறையில் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 8ம் தேதியுடன் முடிவடைந்தது.
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பிரபல கவர்ச்சி நடிகை ஜெயமாலினி அதிர்ச்சிகர தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். சில்க் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தனது பெற்றோரை ஒதுக்கி வைத்தது. அவர் ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். உறவினர்கள் நம்முடன் இல்லை எனத் தெரிந்தால் நம்முடன் இருப்பவர்கள் நம்மை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள். சில்க் ஸ்மிதாவிற்கும் அதுதான் நடந்தது எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK தளத்தில் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரேநேரத்தில் அதிகளவில் பயனர்கள் குவிந்ததால் 2 தளங்களும் முடங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இன்னும் 4 நாட்களில் ஐபிஎல் 17வது சீசன் தொடங்க உள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை, Paytm Insider (9:30am) மற்றும் சிஎஸ்கே இணையதளத்தில் (9:30am) பெறலாம். ஒரு நபர் 2 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
Sorry, no posts matched your criteria.