News May 13, 2024

2014இல் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது

image

இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பணியாற்றுவோம் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அவர், நம் நாடு பல ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், காங்கிரசிடமும் சிக்கி இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பிறகுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும் தடாலடியாக தெரிவித்தார்.

News May 13, 2024

காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்வு

image

சென்னை உள்பட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பீன்ஸ் ₹200 – ₹230க்கும், பச்சை மிளகாய் ₹70க்கும், அவரைக்காய் ₹90 – ₹110க்கும், கேரட் ₹50 – ₹70க்கும், பூண்டு ₹250க்கும், சேனைக்கிழங்கு ₹70க்கும், சின்ன வெங்காயம் ₹62க்கும், தேங்காய் ₹35க்கும், இஞ்சி ₹130க்கும் விற்பனையாகிறது.

News May 13, 2024

RCB அணிக்கு ப்ளே-ஆஃப் வாய்ப்பு உண்டா?

image

மே 18ஆம் தேதி நடைபெறும் சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கவனம் ஈர்த்து வருகிறது. லக்னோ அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட RCB – CSK போட்டி Knockout போட்டியாக மாறிவிடும். அப்போட்டியில் RCB அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்., அல்லது 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும். இது நடக்காவிட்டால் CSK அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

News May 13, 2024

1 மணி நிலவரப்படி 40.32% வாக்குப்பதிவு

image

4ஆம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா – 40.26%, பிஹார் – 34.44%, காஷ்மீர் – 23.57%, ஜார்க்கண்ட் – 43.80%, ம.பி – 48.52%, மகாராஷ்டிரா – 30.85%, ஒடிசா – 39.30%, தெலங்கானா – 40.38%, உத்தரப் பிரதேசம் – 39.68%, மேற்கு வங்கம் – 51.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் ஆந்திரா – 40.26%, ஒடிசா – 39.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News May 13, 2024

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 93.60% பேர் தேர்ச்சி

image

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.48% அதிகமாகும். சென்னை மண்டலத்தைப் பொறுத்தமட்டில், 99.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.75% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 13, 2024

சிறுமி கூட்டு பலாத்காரம்: அமைச்சர் வேதனை

image

உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். முதலில் மிரட்டும் போதே புகார் அளித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம். 1098 என்ற எண்ணில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக சீர்கேட்டைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News May 13, 2024

17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

image

திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 14,15,16 வயதுடைய 3 சிறுவர்கள் உள்பட 9 பேரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

News May 13, 2024

சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல மறுப்பு

image

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நாய்க்கடிக்கு ஆளான சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் மறுத்து வருகின்றனர். ஆக்ரோஷமான ‘பிட் புல்’ நாய் கடித்ததில் சிறுமியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்நிலையில், இழப்பீடு பெறாமல் சிறுமியை டிஸ்சார்ஜ் செய்ய மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

News May 13, 2024

ஃபகத் பாசில் அறிவுரை குறித்து பிருத்விராஜ் கருத்து

image

நாளையே சினிமா இல்லாமல் போனாலும், உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். சினிமா பெரிய விஷயமில்லை என ரசிகர்களுக்கு ஃபகத் பாசில் அறிவுரை கூறியது குறித்து கருத்து தெரிவித்த பிருத்விராஜ், பலரின் வாழ்க்கையில் சினிமா மிகப்பெரிய பொழுதுபோக்காக இருப்பதாகவும், ஆனால், அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென ஒவ்வொருவரும் தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும், என்றார்.

News May 13, 2024

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

image

12ஆம் வகுப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. கடந்த பிப்.15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடந்த இத்தேர்வை, 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.

error: Content is protected !!