News May 13, 2024

மொபைல் ஃபோனால் சிக்கிய கொலையாளி

image

ஆக்ராவில் 10 மாதங்களுக்கு பிறகு கொலையாளி ஒருவர் செல்ஃபோன் சிக்னல் மூலம் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் பதக் (42) என்பவர் 10 மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் அவரது செல்ஃபோனின் சிக்னல் திடீரென கிடைத்ததால், போலீசார் அதனை தேடிச் சென்றனர். அஜய் பதக்கின் வீட்டில் வேலை செய்த சுஷில் குமார் என்பவர்தான் கொலை செய்துவிட்டு செல்ஃபோனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

News May 13, 2024

ராகுல் காந்திக்கு அமித் ஷாவின் 5 கேள்விகள்

image

1.முத்தலாக் முறையை திரும்ப கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறதா? 2.பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமா?கூடாதா? 3.இந்தியாவின் துல்லிய தாக்குதல்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? 4.அயோத்தி ராமர் கோயிலுக்கு ராகுல் காந்தி ஏன் செல்லவில்லை? 5.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவை நீக்கியதை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 13, 2024

மழையால் சிஎஸ்கே – ஆர்சிபிக்கு சிக்கல்?

image

பெங்களூருவில் மே 18ம் தேதி மழை பெய்ய உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அன்றைய தினம் பெங்களூருவில் நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு, மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் பிளேஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.

News May 13, 2024

பிரதமர் மோடி Vs ராகுல் காந்தி

image

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் 103 கூட்டங்களில் பங்கேற்றுள்ள நிலையில், ராகுல் 40 கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தொலைக்காட்சிகள், நாளேடுகளுக்கு மொத்த 24 பேட்டிகளை மோடி அளித்துள்ளார். ராகுல் காந்தி சிறப்பு பேட்டிகள் எதுவும் அளிக்கவில்லை. 21 ரோடு ஷோக்களில் பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான கோயில்களில் தரிசனம் செய்துள்ளார். நியாய யாத்திரை மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை ராகுல் சந்தித்தார்.

News May 13, 2024

குறையும் மருத்துவப் படிப்பின் மவுசு

image

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பையே அதிகம் தேர்வு செய்வதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் மருத்துவப் படிப்புக்கு பயன்படும் பயாலஜி குரூப்பை தேர்வு செய்யவே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவர். தற்போது நீட் தேர்வு அழுத்தம் காரணமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

News May 13, 2024

மீண்டும் மோடி ஆட்சியை நாடு தாங்காது: கார்கே

image

மோடி மீண்டும் ஆட்சியமைத்தால் தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் அடிமைகளாக மாறுவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற கொள்கை உடைய பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அவர், பொய்களை மட்டுமே பேசும் மோடி மீண்டும் தேவையில்லை என்றார். விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு பதிலாக, அவர்களின் உற்பத்தி செலவை மோடி அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார்.

News May 13, 2024

இட ஒதுக்கீட்டினால்தான் சாதி வாழ்கிறதா?

image

2000 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியை ஒழிக்க கொண்டு வரப்பட்டதே இடஒதுக்கீட்டு முறை. ஆனால், சாதியை ஒழிக்க இட ஒதுக்கீட்டையும், சாதி சான்றிதழ்களையும் தூக்கிப் போட வேண்டும் என்று இயக்குநர் பேரரசு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சாதியை ஒழிக்க இட ஒதுக்கீடா? இட ஒதுக்கீட்டால் சாதியா? உங்களது கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.

News May 13, 2024

விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டாலும் தண்டனை

image

சிறுமியுடன் விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டாலும் அது குற்றம்தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சிக்கிய வாலிபர் சதீஷ் குமாருக்கு (25) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. 15 வயது சிறுமியும், சதீஷ்குமாரும் காதலித்து வந்ததாகவும் விருப்பத்தின் பேரிலேயே உறவு வைத்துக் கொண்டதாகவும் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

News May 13, 2024

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு சிறப்பு முகாம்

image

இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வசதிகளைச் செய்து வருகின்றன. இந்தாண்டு சுமார் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்து முகாம் மற்றும் தடுப்பூசி முகாமை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

News May 13, 2024

RR – CSK போட்டி #Fixing?

image

நேற்று மதியம் நடந்த போட்டியில் RR அணியை வீழ்த்தி CSK ப்ளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் RR, நேற்றையை போட்டியில் மிக மோசமாக விளையாடியது. இதனால், இப்போட்டி முழுக்க முழுக்க Fixing செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் நெட்டிசன்கள், #Fixing என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!