India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தருவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காய் வைட்டமின் சி இன் அதிசிறந்த ஆதாரமாக உள்ளதால், வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் இதுவரை 80 முறை அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியாவில் மக்கள் ஏழைகளாகவே இருப்பதாக தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நலன் மீது எப்போதும் அக்கறை இருந்ததில்லை என்றார். பல முறை அரசியல் சட்டத்தை மாற்றிய காங்கிரஸ், பாஜகவை குற்றம் சாட்டுவதை யாரும் ஏற்க போவதில்லை என்றும் கூறினார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த GT 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய CSK அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மிச்செல் 63, மொயின் அலி 56, டூபே 21, தோனி 26* ரன்கள் அடித்தனர். கடைசியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 196/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக 400 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிடுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் 326 இடங்களில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு காரணமாக, காங்கிரஸ் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2019, 2014, 2009, 2004 தேர்தல்களில் முறையே 421, 464, 440, 417 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை வீரர்கள் மிட்செல், மொய்ன் அலி அரை சதம் கடந்தனர். அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், CSK அணி 232 ரன்கள் இலக்கை துரத்தி வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மிட்செல் 62 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். மொய்ன் அலி 50 (31) ரன்கள் எடுத்துள்ளார். CSK அணி தற்போது வரை 13 ஒவர்களில் 125/4 ரன்களுடன் ஆடி வருகிறது.
*மேஷம் – உகந்த நாள்
*ரிஷபம் – மந்தமான நிலை காணப்படும்
*மிதுனம் – குழப்பம் உண்டாகும்
*கடகம் – உணர்ச்சிவசப் படக்கூடாது
*சிம்மம் – சாதகமான நாள்
*கன்னி – கவனமாக இருக்க வேண்டும்
*துலாம் – சிறப்பான நாள்
*விருச்சிகம் – கடவுள் வழிபாடு தேவை
*தனுசு – வெற்றி உண்டாகும்
*மகரம் – முக்கிய முடிவு எடுக்கலாம் *கும்பம் – பிரச்னை ஏற்படும் *மீனம் – சிக்கலான நாள்
IPL தொடரில் 25 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கர் சாதனையை குஜராத் வீரர் சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு, 31 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,000 ரன்களை சச்சின் டெண்டுல்கர் விளாசியது சாதனையாக இருந்தது. அதை இன்று சுதர்சன் முறியடித்தார். சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 103 ரன்களை குவித்து, 1,000 ரன்களை சுதர்சன் கடந்தார். இது அவரின் 25ஆவது இன்னிங்ஸ் ஆகும்.
*ஏப்., 24: பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. *ஏப்., 29: ED வாக்குமூலத்தை பதிவு செய்யாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. *மே 3: தேர்தலை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. * மே 10 : 50 நாள்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு (ஜூன் 1 வரை) இடைக்கால ஜாமின் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரவு 10 முதல் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும், இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
*பிப்., 7, 2024: ED அளித்த புதிய புகாரின்பேரில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. *மார்ச் 21, 2024: கெஜ்ரிவாலை ED கைது செய்தது. *ஏப்., 9, 2024: EDஇன் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மார்ச் 23 ஆம் தேதி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. *10 ஏப்., 2024: ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
Sorry, no posts matched your criteria.