News March 18, 2024

இறுதிக்கட்டத்தில் ஆர்யாவின் ‘மிஸ்டர் X’

image

ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் X’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படமானது, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தில் உள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பை பெற, நடிகர் ஆர்யா கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். படத்தின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

சாலை விபத்தில் 9 பேர் பலி

image

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக 6 பேர் ஜீப்பில் சென்றபோது, அதிக பாரத்துடன் வந்த டிராக்டர் ஜீப்பின் மீது மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்

image

மக்களவைத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. அவை, 1. வடசென்னை 2. தென்சென்னை 3. மத்திய சென்னை 4. ஸ்ரீபெரும்புதூர் 5. காஞ்சிபுரம் (தனி) 6. அரக்கோணம் 7. வேலூர் 8. தருமபுரி 9. திருவண்ணாமலை 10. கள்ளக்குறிச்சி 11. சேலம் 12. நீலகிரி (தனி) 13. தஞ்சாவூர் 14. தூத்துக்குடி 15. தென்காசி (தனி) 16. தேனி 17. ஆரணி 18. கோவை 19. பொள்ளாச்சி 20. ஈரோடு 21. பெரம்பலூர் ஆகும்.

News March 18, 2024

திருச்சியில் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்

image

திருச்சியில் 23ம் தேதி முதல் இபிஎஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமகவை கொண்டுவரும் முயற்சி பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், எப்படியாவது 23ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப்பங்கீட்டை முடித்து, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

News March 18, 2024

மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு

image

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், ஒரு தொகுதி தான் திமுக ஒதுக்கியது. இதனால், விரும்பிய தொகுதியை வழங்க வேண்டும் என மதிமுக பிடிவாதமாக கூறியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதி, தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு நிறைவு

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியே இறுதி செய்யாத நிலையில், திமுக தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக – 21, காங்., – 10, விசிக – 2, சிபிஎம் – 2, சிபிஐ – 2, மதிமுக – 1, ஐயூஎம்எல் – 1, கொமதேக -1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

News March 18, 2024

BREAKING: 2 இடங்களில் திமுக போட்டியிடவில்லை

image

திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் கார்த்தி, கரூரில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர் களமிறங்க வாய்ப்புள்ளது.

News March 18, 2024

தொகுதி பங்கீட்டு குழுவுடன் இபிஎஸ் ஆலோசனை

image

தேமுதிக, பாமக உடனான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் நடக்கும் இந்த ஆலோசனையில், தேமுதிக, பாமக கேட்கும் தொகுதிகளை கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. எப்படியாவது அக்கட்சிளுடனான கூட்டணியை தக்க வைத்தே ஆக வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியதாகவும் கூறுப்படுகிறது.

News March 18, 2024

இரட்டை இலை சின்னத்தை முடக்கும் ஓபிஎஸ் அணி?

image

தமிழகத்தில் ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இபிஎஸ் வசமே கொடி, சின்னம் உள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிட உள்ளதாக ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக கூறுகிறது. இதுதொடர்பான வழக்கில் இன்று இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், சின்னத்தை முடக்கும் பணியில் ஓபிஎஸ் அணி ஈடுபடும் எனத் தெரிகிறது.

News March 18, 2024

திமுக கூட்டணியில் 10 தொகுதியில் காங்., போட்டி

image

நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 9+1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 1. திருவள்ளூர் (தனி) 2. கடலூர் 3. மயிலாடுதுறை 4. சிவகங்கை 5. திருநெல்வேலி 6. கிருஷ்ணகிரி 7. கரூர் 8. விருதுநகர் 9. குமரி 10. புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!