India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 சட்டப்பேரவை தேர்தலில் மூத்த மகனுக்கு சீட் கொடுக்க போகிறேன் என்று சீமான் கூறியது விவாதப்பொருளாக மாறியது. ஆனால், உண்மையில் சீமான் தன்னுடைய மகனை அவ்வாறு சொல்லவில்லை. நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹீமாயூன் கபீருக்கு பதில் அவரின் மூத்த மகனை தேர்தலில் போட்டியிட வைப்பதாக கூறினார். ஆனால், அவரின் பேச்சை சிலர் திரித்து செய்தியாக வெளியிடுவதாக மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் விளக்கமளித்துள்ளார்.
ஏப்.10க்கு பிறகு திமுக – அதிமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேர்ந்து, கோவையில் என்னை தோற்கடிக்க போராடும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். குளுமையாக இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம் என குற்றம் சாட்டிய அவர், டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கிக் கொடுப்பவர் இபிஎஸ்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்கக் கூடாது என்று சாடினார்.
தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி, 10 ஆண்டு கால ஆட்சியில் பிரமர் மோடி என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியில் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்ததாக விமர்சித்த அவர், சிஏஜி அறிக்கையில் 9 ஆண்டுகளில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை. அனைத்து திட்டங்களிலும் பாஜக முறைகேடு செய்துள்ளது என குற்றம் சாட்டினார்.
சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. குணா குகையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் தமிழ் டப்பிங்கில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலைக் குவித்த மலையாள படம் என்ற சாதனையை படைத்தது. உலக அளவில் இப்படம் ₹200 கோடி வசூலை குவித்த நிலையில், படக்குழுவுக்கு வாழ்த்து குவிகிறது. அந்தவகையில், நடிகர் சிம்பு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சிபிஎஸ்இ-யில் 3 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறுகையில், “சிபிஎஸ்இ 3 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம், பாட நூல்களை தயாரிக்கும் பணி நடக்கிறது. அவை விரைவில் வெளியிடப்படும். வேறு எந்த வகுப்புக்கும் புதிய கல்வி ஆண்டில் பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்காது” எனக் கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால், சிறைக்குள் இருந்தபடி அரசு உத்தரவு வெளியிட்டுள்ளார். அமலாக்கத் துறையால் சில நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தனது காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிறையில் இருந்தபடி கெஜ்ரிவால், நீர்வளத்துறை தொடர்பான உத்தரவை பிறப்பித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களும் நாளை (மார்ச் 25) மதியம் 12 மணிக்கு ஒரே நாளில் தங்களது தொகுதிகளில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளனர். இதேபோல், பெரும்பாலான திமுக வேட்பாளர்களும், நாளை தங்களது தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷை 2வது திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகை மீனா மறுப்பு தெரிவித்துள்ளார். பணத்திற்காக எதையாவது எழுதுவீர்களா? என்று ஊடகங்களை சாடிய அவர், உண்மை அறிந்து எழுதுவது நல்லது என்று தெரிவித்தார். தனது பெற்றோர், மகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், 2வது திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்படி இருந்தால் தானே வெளிப்படுத்துவேன் எனவும் கூறினார்.
தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் பாஜகவின் மாநில துணை தலைவரும், வடசென்னை பாஜக வேட்பாளருமான வழக்கறிஞர் பால் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபட சில வழிமுறைகள் உள்ளன. கோயிலுக்குள் நுழைந்ததும், நந்தியையும், அதன்பிறகு விநாயகரையும் வணங்க வேண்டும். பின்னர் சிவன் சந்நிதிக்கு சென்று வழிபட வேண்டும். அதையடுத்து அம்பாள் சந்நிதியில் வழிபட வேண்டும். அதைத் தொடர்ந்து, நவகிரக வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சந்நிதியை சுற்றிவர வேண்டும். இப்படி செய்வதால், சிவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.