News March 24, 2024

மார்ச் 29ல் பரப்புரையை தொடங்குகிறார் கமல்

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29ம் தேதி முதல் பரப்புரையை தொடங்குகிறார். அதன்படி, மார்ச் 29- ஈரோடு, மார்ச் 30- சேலம், ஏப்.2- திருச்சி, ஏப்.6- ஸ்ரீபெரும்புதூர், சென்னை, ஏப்.7- சென்னை, ஏப்.10 – மதுரை, ஏப்.11- தூத்துக்குடி, ஏப்.14- திருப்பூர், ஏப்.15- கோவை, ஏப்.16- பொள்ளாச்சி என மொத்தம் 11 நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

News March 24, 2024

”தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் தொகுதி இதுதான்”

image

மோடி 10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை; அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும். அதுவும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் மட்டும் வெற்றி பெறுவார் எனத் தெரிவித்தார்.

News March 24, 2024

நீலகிரியில் மோடி ஜீயா, 2 ஜியா?

image

நீலகிரி தொகுதியில் மோடி ஜீயா, 2ஜியா? என போட்டி நிலவுவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தனித் தொகுதியான நீலகிரியில் திமுக எம்.பி ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் எல்.முருகன் களம் காண்கிறார். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகரான தனபாலின் மகன் யோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். முக்கிய நபர்கள் போட்டியிடுவதால் இத்தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

News March 24, 2024

5ஜி கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் பரிசீலனை

image

5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 5ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை 2 நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவைக்கு 5% முதல் 10% கட்டணம் உயர்த்தவும், 30% கூடுதல் டேட்டா அளிக்கவும் 2 நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. இந்தத் தகவலால், 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 24, 2024

‘The GOAT’ ஃபர்ஸ்ட் லுக் உருவானது இப்படிதான்

image

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘The GOAT’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இரட்டை வேடங்களில் விஜய் இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின், மேக்கிங் புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

News March 24, 2024

எம்.பி., கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன ஆனாது என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை. மருத்துவ அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது .

News March 24, 2024

தேனி தொகுதியை டிடிவி தினகரன் தேர்வு செய்தது ஏன்?

image

ஓபிஎஸ்சும், அவரின் மகனும் கேட்டுக் கொண்டதாலேயே தேனி தொகுதியில் தாம் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் செல்வன் என எனக்கு தேனி மக்கள்தான் பெயர் வைத்தனர். கடந்த மாதம் நான் தேனி சென்றபோது, அங்கு போட்டியிடும்படி ஓபிஎஸ்சும் அவரின் மகனும் கேட்டனர். அத்தொகுதி மக்களும் கேட்டனர். இதனால் தேனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன்” என்றார்.

News March 24, 2024

4 மாநில விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று இந்த 4 மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தொடர்ந்து, 4 மாநிலங்களில் 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறிய அவர் தெலங்கானாவில் மட்டும் 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது.

News March 24, 2024

மக்களவைத் தேர்தலில் கங்கனா போட்டியிட வாய்ப்பு

image

மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ள கங்கனா, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாஜக, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அவர், இந்த தேர்தலில் ஹிமாச்சலின் மான்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News March 24, 2024

பிரம்ம மூகூர்த்தத்தில் வேட்பு மனுவில் அதிமுக கையெழுத்து

image

நாளை அதிகாலை பிரம்ம மூகூர்த்த நேரத்தில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டு, மதியம் அதிமுகவினர் மனு தாக்கல் செய்யவுள்ளனர். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் இதுபோல செய்து அதிமுகவினர் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதை மனதில் வைத்து நாளை அதிகாலை பிரம்ம மூகூர்த்த நேரத்தில் மனுவில் கையெழுத்திட்டு, சிறப்பு வழிபாடு செய்து, பிறகு மதியம் 12- 1 மணி வரை புதன் ஓரையில் அவர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

error: Content is protected !!