India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, டெல்லியில் இன்று I.N.D.I.A கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் இப்பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல உள்ளது. இதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். பஞ்சாபில் இருந்து ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகின் தலைசிறந்த ஆட்டுக்கறி உணவுகளின் பட்டியலை, டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் ‘ரோகன் ஜோஷ்’ (Rogan Josh) 26ஆவது இடத்தையும், கலோட்டி கபாப் (Galouti Kebab) 27ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. குறிப்பாக, ரஷ்யா, போலந்து, பிரேசில், கிரீஸ் ஆகிய நாடுகளின் ஆட்டுக்கறி உணவுகள், முதல் 10 இடங்களை பிடித்துள்ளது. உங்களுக்கு எந்த ஆட்டுக்கறி உணவு பிடிக்கும்?
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியிலான முக்கிய பதவியாகும். ஆளுநர்களிடம் உங்களது பணியை செய்யுங்கள், மசோதாக்களை தாமதப்படுத்தாதீர்கள் என கூறுவது நீதிமன்றங்களுக்கு சங்கடமாக உள்ளது” என்றார்.
சவுதி ப்ரோ கால்பந்து போட்டியில், ரொனால்டோவின் அல்-நாசர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அல்-தை அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில், அல்-நாசர் அணி வீரர்கள் ஒட்டாவியோ, அப்துல் ரகுமான் ரஹீம் ஆகியோர் தலா 1 கோல் அடித்து அசத்தினர். பின்னர், 2ஆவது பாதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோ, அடுத்தடுத்து 3 கோல்களை அடிக்க, 5-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
2021இல் திரிணாமுல் கொண்டுவந்த “லக்ஷ்மிர் பந்தர்” என்ற திட்டத்தை காப்பியடித்து பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தி வருவதாக திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார். மேலும், மத்திய பாஜக அரசு சமையல் சிலிண்டர் ஏழை மக்களுக்கு இலவசம் என்று அறிவித்தால், நாங்கள் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் திருப்ப பெற தயார். நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதை நிறைவேற்றி காட்டுவோம் என்றார்.
கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உள்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் முறையாக உடல்பரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசு கடந்த 2016இல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாதென அறிவித்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய நீதிபதி நாகரத்னா, “பணமதிப்பிழப்பால் கருப்பு பணத்தை பதுக்குபவர்களே பயனடைந்தனர். கருப்பு பணத்தை அவர்கள் வெள்ளையாக்கி விட்டனர். ஆனால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்வு செய்யப்பட இருப்பதாக கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் 1 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது நடைபெறும் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கவனத்தில் வைத்து, ஏப்ரல் மாத கடைசியில் அணி தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் பாஸ்ட் டேக்கில் கேஒய்சி விவரத்தை புதுப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆதலால் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமோ கேஒய்சி விவரத்தை இன்றைக்குள் புதுப்பிக்கும்படி தேசிய நெடுஞ்சாலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கேஒய்சி விவரம் புதுப்பிக்கவில்லையெனில் பாஸ்ட் டேக் கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்ப வேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.