News April 1, 2024

சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்

image

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகவில்லை.

News April 1, 2024

கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து கருணாநிதிக்கு தெரியும் (3)

image

3) கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடியுமா என கருணாநிதி கேட்டார். ஆனால் வெளியுறவு செயலர், உள்நாடு, வெளிநாட்டு ரீதியில் சில தடைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்ததால், கருணாநிதி தனது கருத்தை நிர்பந்திக்கவில்லை. 4) ஒப்பந்தத்தை அறிந்ததும், தமிழகத்தில் எதிர்ப்பு எழும் என கருணாநிதி கூறினார். அந்த எதிர்ப்பை கட்டுக்குள் வைப்பதாக கருணாநிதி உறுதியளித்தார்.

News April 1, 2024

கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து கருணாநிதிக்கு தெரியும் (2)

image

1) இந்திரா காந்தி அரசில் இருந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலருக்கு தெரியும் முன்பே, கச்சத்தீவு ஒப்படைப்பு ஒப்பந்தம் குறித்து கருணாநிதிக்கு தெரியும். 2) எதிர்க்கட்சிகளுக்கு தெரியுமா என வெளியுறவு செயலரிடம் கருணாநிதி கேட்டார். அதற்கு தமிழகத்தின் கருத்தை அறிந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசலாம் என இந்திரா காந்தி நினைப்பதாக வெளியுறவு செயலர் பதிலளித்தார்.

News April 1, 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அறிவிப்பு

image

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 5ஆம் தேதி வெளியிடப்படுமென அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. அறிக்கையை தயாரிக்க பாஜக 27 பேர் கொண்ட கமிட்டியை 2 நாள்களுக்கு முன்பே அமைத்தது. இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ், 5ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

News April 1, 2024

கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து கருணாநிதிக்கு தெரியும் (1)

image

கச்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ மூலம் அண்ணாமலை பெற்ற மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 1974ஆண்டில் ஜூன் 19இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெளியுறவு செயலர் கேவால் சிங் சந்தித்து, கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு விட்டு கொடுக்கும் ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது தனது ஒப்புதலை கருணாநிதி தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

News April 1, 2024

சிஎஸ்கே தோல்வி: வைரலாகும் சாக்ஷியின் பதிவு

image

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இதுகுறித்து தோனியின் மனைவி சாக்ஷி சிங் தனது இன்ஸ்டாவில் சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார். அதில், வெற்றிக் கணக்கைத் தொடங்கியதற்காக டெல்லி கேப்டன் பண்ட்டைப் பாராட்டினார். அத்துடன், தோனியின் இன்னிங்ஸை மறைமுகாக புகழ்ந்து பேசும் வகையில், போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததை உணரமுடியவில்லை என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

News April 1, 2024

ஏப்.9ல் சென்னை வருகிறார் மோடி

image

பிரதமர் மோடி ஏப்.9இல் சென்னை வர உள்ளதாகவும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகன அணிவகுப்பு மூலம் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டில் மட்டும் 6 முறை மோடி தமிழகம் வந்துள்ளார். தொடர்ந்து, நீலகிரி, பெரம்பலூர் தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

News April 1, 2024

தோனியின் பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்

image

டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் தோனி பவுண்டரி விளாசியபோது, ரசிகர்களின் கூச்சலால் மைதானமே அதிர்ந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். இதில் ஒரு பவுண்டரியை அவர் விளாசியபோது, ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டதால் மைதானமே அதிர்ந்தது. அப்போது மைதானத்தில் சத்த அளவு, 128 டெசிபலாக பதிவாகியுள்ளது.

News April 1, 2024

அருணாச்சல் விவகாரத்தில் சீனா மீண்டும் அத்துமீறல்

image

அருணாச்சல் பிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிதாக பெயரிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலில் 2017இல் 6 இடங்களுக்கும், 2021இல் 15 இடங்களுக்கும், 2023இல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது. இந்நிலையில் தற்போது 12 மலைகள், 4 நதிகள், ஒரு நிலப்பகுதி உள்ளிட்ட மேலும் 30 இடங்களுக்கு சீன சிவில் விவகார அமைச்சகம் பெயரிட்டுள்ளது.

News April 1, 2024

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (1)

image

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதை தெரிந்து கொள்ளலாம். 1) புதிய வரிவிதிப்பு கட்டமைப்புக்குள் வரி செலுத்துவோர் தாமாக சேர்வது. அதில் சேர விருப்பமில்லையேல் பழைய வரிவிதிப்பில் தொடர்வது 2) பழைய வரி விதிப்பு முறையில் உள்ள மொத்த வருமானத்தில் ரூ.50,000-ஐ கழிக்கும் முறை புதிய வரி விதிப்பிலும் சேர்ப்பு

error: Content is protected !!