News April 1, 2024

BREAKING: அப்போலோவில் அமைச்சர் அனுமதி

image

தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்ற முழு விவரம் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 1, 2024

எஸ்.கே-வுக்கு வில்லனாகும் வித்யுத் ஜம்வால்

image

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘SK23’ படத்தில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற விஜய்யின் துப்பாக்கி படத்தில் வித்யுத் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் விஜய், ரஜினியை பின்பற்றும் எஸ்.கே, தற்போது நடிகர்கள் தேர்விலும் அதே பாணியை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.

News April 1, 2024

இபிஎஸ் இருந்தால் யூபிஎஸ் தேவையில்லை

image

பிரதமர் மோடியை வரவேற்பதிலும், எதிர்ப்பதிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விமர்சித்தார். அப்போது தொண்டர் ஒருவர், ‘இபிஎஸ் இருந்தால் யூபிஎஸ் தேவையில்லை’ என கோஷமிட்டார். இதைக்கேட்ட அவர், அதிமுகவில் தான் சாதாரண தொண்டர் கூட இப்படி சிந்தனையுடன் விழிப்போடு இருப்பர் என புகழ்ந்து பேசினார்.

News April 1, 2024

BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்

image

இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

News April 1, 2024

கச்சத்தீவை ஒப்படைக்க 1974இல் எதிர்ப்பு தெரிவித்த எம்பி

image

கச்சத்தீவு ஒப்படைப்பு தொடர்பாக ஆர்டிஐ மூலம் அண்ணாமலை பெற்ற தகவலில், திமுக எம்பி இரா. செழியன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங் அறிக்கை அளித்தபோது, தேச நலனுக்கு எதிரானது என 1974ஆம் ஆண்டு ஜூலை 23இல் இரா செழியன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கருணாநிதி ஒப்புதல் அளித்தது அவருக்கு தெரியாது என கூறப்பட்டுள்ளது.

News April 1, 2024

புதிய வருமான வரி விதிகள் அமலுக்கு வரவில்லை

image

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்.1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கமளித்த நிதியமைச்சகம், வரி செலுத்துவோர் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ அந்த வரி முறையை (Old or New) தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

News April 1, 2024

வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்

image

CSKக்கு எதிரான நேற்றைய போட்டியில் DC கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டத்தை அந்த அணியின் இயக்குநர் கங்குலி பாராட்டியுள்ளார். ரிஷப் அபாரமாக விளையாடியதாக புகழ்ந்த அவர், நீங்கள் பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடினாலும், இந்த இன்னிங்ஸை உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடி வரும் அவர், நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.

News April 1, 2024

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் அம்பலம்

image

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக மோடி விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக தோலுரித்துவிட்டன. காங்கிரசும் திமுகவும் ஒரு குடும்பத்தின் அங்கங்கள். அவர்களின் அலட்சியப் போக்கு, மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.

News April 1, 2024

கச்சத்தீவு விவகாரம்: தேர்தலில் எதிரொலிக்குமா?

image

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது, கைது செய்வது தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம், கச்சத்தீவை திமுக கூட்டணியில் இருந்தபோது இந்திரா தலைமையிலான காங்., இலங்கைக்கு தாரை வார்த்ததுதான். இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் கையெடுத்து, திமுக – காங்., கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

News April 1, 2024

ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

image

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டது, ஐபிஎல் சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!