India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி என ஓபிஎஸ் கூறியுள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் துயரத்துக்கு ஆளாகி வருவதாகவும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.
மின்சார கார்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டெஸ்லா பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. உலகில் அதிக அளவு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனமாக திகழும் டெஸ்லா, இந்தியாவிலும் கார் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக கூட்டாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதன்கீழ் கார்களை தயாரிப்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டெஸ்லா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
நெல்லை மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து அக்கட்சித் தலைமைக்கு நாங்குநேரி காங்கிரஸார் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். அதில், நெல்லையில் ராபர்ட் புரூஸ் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல என்றும், ராபர்ட் புரூஸ் தோற்பதற்கான வேலைகளை ரூபி மனோகரன் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சாலை விபத்தில் சிக்கி கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 2018-ம் ஆண்டு வெளிவந்த ‘கினாவல்லி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரசாரக் கூட்டங்களில் அதிமுகவை பாஜகவும், பிரதமர் மோடியும் விமர்சிக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்டோர் பிரசாரத்தின் போது திமுகவையும், முதல்வர் மு.க. ஸ்டாலினையும் வசை பாடுகின்றனர். ஆனால் அதிமுகவையோ, இபிஎஸ்சையோ கடுமையாக விமர்சிப்பது இல்லை. இது தேர்தலுக்கு பிறகு மீண்டும் 2 கட்சிகளும் கூட்டணி சேருமா என்பது உள்ளிட்ட பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவில் பேஸ்புக்கின் சக்தியை அறிந்து கொள்ள, ஓராண்டுக்கு முன் தன்னையும், தனது 2 குழந்தைகளையும் விட்டு திடீரென மாயமான கணவர் சார்லஸை கண்டுபிடித்து தரக்கோரி ஆஷ்லி என்பவர் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆஷ்லியின் பழைய எண்ணுக்கு அழைத்த கணவர் சார்லஸ் விரைவில் வீடு திரும்புவதாக கூறியுள்ளார். கணவர் கிடைத்ததால் ஆஷ்லி தனது பழைய பதிவை நீக்கியுள்ளார்.
கோடைகாலம் வந்தாலே சிலருக்கு வியர்க்குரு பெரிய பிரச்னையாக இருக்கும். அவர்கள் கற்றாழை ஜெல்லை தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்து வந்தால் வியர்க்குருவை குறைக்கலாம். அரிப்பு உள்ள இடங்களில் ஐஸ் கட்டி கொண்டு தேய்த்தால் வியர்க்குரு பிரச்னை நீங்கும். சந்தன பவுடரை பன்னீருடன் கலந்து பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தேய்க்க விரைவில் சரியாகும்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லையில் ஊடுருவலைத் தடுக்கவில்லை என அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். தக்சின் தினாஜ்பூரில் பிரசாரம் செய்த அவர், வாக்குகளுக்காக மம்தா பானர்ஜி ஊடுருவலை அனுமதிப்பதாக விமர்சித்தார். அசாமில் பாஜக ஊடுருவலை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் பாஜக 30 தொகுதிகளை வென்றால் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.
மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி தரவில்லை. அதனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மக்களுக்கு உறுதியளித்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசு மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்., கட்சியின் இந்த நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 பேருக்கு சொத்துகளே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் 10 பேர் தங்களுக்கு அசையும் சொத்தோ, அசையா சொத்தோ இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதுபோல், தமிழகத்தில் 7 சுயேச்சை உள்ளிட்ட 8 பேர் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.