India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 5 முறை அருணாச்சலப் பிரதேசத்தை ‘சீன பகுதி’ என சீனா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குடியிருப்புகள், மலைகள், ஆறுகள் என 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை ‘Zangnan’ என குறிப்பிட்டு சீனா உரிமைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
உ.பி.,யின் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து அமைப்புகள் பூஜை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மசூதிக்குள் கள ஆய்வு நடத்திய தொல்லியல் துறை, 55 இந்து தெய்வ சிற்பங்கள் இருப்பதாக வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து மசூதியின் தெற்கு பகுதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு கோர்ட் அனுமதித்தது.
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதலை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், வெள்ளம் வந்தபோது ஏன் வரவில்லை. இரு பேரிடர்களால் மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்லக்கூட பிரதமர் ஏன் வரவில்லை என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்றைய ஐபிஎல் போட்டியில் களம் இறங்கிய தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள், ‘அவர் ஒரு ஓவர் முன்னதாகவே பேட் செய்ய வந்திருந்தால் சிஎஸ்கே ஜெயித்திருக்கும்’ என ஆதங்கப்பட்டனர். 8வது இடத்தில் அவர் களமிறங்கியதாலே சிஎஸ்கே தோல்வியடைந்ததாகவும் கூறுகின்றனர்.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரசே மூலக்காரணம் என்று கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரசே முதலில் போலீசில் புகார் அளித்தது. அதை வைத்தே E.D. விசாரணையை கையில் எடுத்தது. சிசோடியா கைதானபோது கெஜ்ரிவாலை கைது செய்யவில்லையா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இப்போது தனது நிலையை காங்கிரஸ் மாற்றியுள்ளது” என்றார்.
இந்தியா முதல்முறையாக ரூ.2 1,000 கோடிக்கு அதிகமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.21,083 கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 32.5% அதிகம். சுதந்திர இந்தியாவில் அதிக மதிப்புக்கு ஆயுத ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் திமுக மீது கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளதாக கூறிய அவர், கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, மக்களை திசை திருப்புவதாகவும் சாடினார். மேலும், இலங்கை திவாலான போது கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், NEFT பரிவர்த்தனையை இன்று பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மேற்கொள்ளப்படும் NEFT பரிவர்த்தனைகள் தாமதமாகலாம் (அ) கிடைக்காமல் போகலாம் என்று கூறியுள்ளது. இதனால், HDFC வங்கி கணக்கு மூலம் சம்பளம் பெறுவோருக்கு இன்று பணம் கிடைக்காது என தெரிகிறது.
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடனும், 4ஆம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.