India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறப்பு கோர்ட் ஏப்.15 வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் கெஜ்ரிவால் தரப்பில் 5 வசதிகள் கேட்கப்பட்டுள்ளது. அவை 1.மருந்துகள், 2.பகவத் கீதை, ராமாயணம் மற்றும் How Prime Ministers Decide புத்தகங்கள். 3.மத அணிகலன்கள், 4.சிறப்பு உணவு, 5.டேபிள் மற்றும் சேர் ஆகியவை ஆகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்.19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சுயேச்சை மற்றும் கட்சி வாரியாக வேட்பாளர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ADMK 34, DMK 22, BJP 23, NTK 39, சுயேச்சை வேட்பாளர்கள் 609 பேர் உள்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர்.
ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2ஆம் எண் அறை ஒதுக்கப்பட்டது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் வாதாடியது. இதனையடுத்து, ஏப்.15 வரை கெஜ்ரிவாலை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், தூத்துக்குடி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது 3ஆவது மைல் பகுதியில் சென்ற அவரது வாகனத்தை வழிமறித்த அதிகாரிகள், அதில் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பிறகு அவர் புறப்பட்டுச் சென்றார்.
பிருத்விராஜ் நடிப்பில் மார்ச் 28ஆம் தேதி வெளியான “ஆடு ஜீவிதம்’ படம் வெளியான 4 நாட்களில் 50 கோடியை கடந்துள்ளது. தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கிய இப்படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் 1,724 தியேட்டரில் வெளியான இப்படம் முதல் நாளில் 16.5 கோடி வசூலித்திருந்தது. இப்படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து விரைவில் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021-ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தற்போது 7.4 பில்லியன் டாலராக அதிகரித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! #தலைநிமிரும்_தமிழ்நாடு! எனக் குறிப்பிட்டுள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்வுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 135 புள்ளிகளும் உயர்வுடனும் முடிவடைந்தன. மேலும், ஏப்ரல் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகள் 10 நாட்கள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.11 -ரமலான் பண்டிகை, ஏப்.17 – ராமநவமி மற்றும் 4 வாரங்களில் சனி, ஞாயிறு என மொத்தம் 10 நாட்கள் பங்குச்சந்தைகள் இயங்காது.
கச்சத்தீவை தாரை வார்த்ததில் கருணாநிதிக்கும், திமுகவுக்கும் முக்கியப் பங்கு உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் கூட்டு சதியால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கருணாநிதி ரகசியம் காத்ததாகவும் கூறினார். மேலும், கச்சத்தீவு பகுதியை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கவும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுவதால், பாஜக 400 இடங்களில் வெல்லும் என நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ருதி, 1996-ல் தமிழில் வெளியான கல்கி படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வாங்கினார். இந்த நிலையில், அரசியலில் முன்னேற வேண்டும் என பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை பிரதமர் வழங்கியதாகவும், அதனால் தனது முழுமையான ஆதரவு மோடிக்கு தான் எனவும் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், ‘2015இல் தகவல் அறியும் விண்ணப்பத்தில் தான் அளித்த பதிலை ஜெய்சங்கர் படித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சரி எனக் கூறியிருந்தார். இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்?’ கேள்வி வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.