News May 7, 2024

‘ஸ்டார்’ படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்

image

‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

News May 7, 2024

இன்றே கடைசி: மத்திய அரசில் 3712 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <>https://ssc.gov.in/home/apply<<>> என்ற இணையதளத்தின் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News May 7, 2024

உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

image

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், வட உள் மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மே 10ஆம் தேதி வரை வெப்பநிலை 4 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது..

News May 7, 2024

இன்று மூன்றாவது கட்டத் தேர்தல்

image

நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்று காலை 7 மணிக்கு மூன்றாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் கர்நாடகா, குஜராத் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 93 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் நடைபெறுவதால் இன்றைய தேர்தல் பாஜகவிற்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

News May 7, 2024

12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் சதம்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்ட மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் 101* ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டினார். இவரது அதிரடியால் மும்பை அணி 17.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதம் அடித்த SKY, மும்பை அணிக்காக அதிக சதங்கள் (2) அடித்த வீரர் என்ற ரோஹித்தின் சாதனையை சமன் செய்தார்.

News May 7, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* நாடு முழுவதும் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
* பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
* ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
* Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
* டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்.

News May 7, 2024

தமன்னாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய் வர்மா

image

சுந்தர்.சி இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை-4’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் நாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தமன்னாவின் நடிப்பில் பலராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில், தமன்னாவின் காதலர் விஜய் வர்மா அவரைப் பாராட்டி, அரண்மனை 4-ல் உங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு வாழ்த்துகள் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News May 7, 2024

நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆக வாருங்கள்

image

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, உங்கள் முன் மேற்படிப்புக்காக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும் வெற்றிபெற்று நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம் வாருங்கள் என வாழ்த்தியுள்ளார். மேலும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன என தைரியம் அளித்துள்ளார்.

News May 7, 2024

முடிவுக்கு வரும் ஹமாஸ் – இஸ்ரேல் போர்?

image

பல மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. கத்தார் பிரதமர், எகிப்து உள்துறை அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக ஒப்புதல் அளித்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதற்காக ஹமாஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஹமாஸ் படையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தப் பரிந்துரையை இஸ்ரேல் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 7, 2024

ராஜஸ்தானை சமாளிக்குமா டெல்லி கேபிடல்ஸ்?

image

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 56ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? என கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!