India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூன் மாதத்துக்கான திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைனில் இன்று காலை தொடங்குகிறது. தரிசனத்துக்கு பலமணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க 3 மாதத்துக்கு முன்பே, டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான தரிசன முன்பதிவு, தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவராகவும் இருந்த கதிர்வேல், அக்கட்சியில் இருந்து திடீரென்று விலகியுள்ளார். தூத்துக்குடியில் தமாகா சார்பில் விஜயசீலன் போட்டியிடும் நிலையில், அதிருப்தியடைந்த கதிர்வேல் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு ஜி.கே.வாசன் விற்று வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ் தடை விதிக்கக் கோரி இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஓபிஎஸ் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதித்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடந்த வழக்கு, 2 நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தொடங்கி உள்ளன. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின்
வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பாண்டியாவுடன் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி போராடி தோல்வியடைந்தது. போட்டிக்கு பிறகு பின்னாலிருந்து வந்து கட்டி அணைத்த பாண்டியாவை சட்டென தள்ளிய ரோஹித், அவருடன் வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை. ஹோலி பண்டிகையான இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு, திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வங்கிகள் திறந்திருக்கும் என்றும், வழக்கம் போல பணிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவை இரண்டாக உடைத்து ஷிண்டே பாஜக உதவியுடன் ஆட்சியமைத்தார். தற்போது மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பையும், ஷிண்டே பிரிவு சிவசேனாவையும் ஒன்றாக்கி, ராஜ் தாக்கரே தலைமையில் புதிய அமைப்பை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், ஷிண்டே ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளதால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளதாக பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “காலம் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும். தற்போதைய சூழ்நிலையில் மேலும் சில காலம் பாக். அணிக்காக விளையாட விரும்புகிறேன். வரும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்தால் களமிறங்குவேன்”என்றார். இவர் 2020இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் ராகுலை எதிர்த்து கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு 3வது இடம் பிடித்து தோல்வி அடைந்தவர். மீண்டும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் தற்போது வயநாடு தொகுதியில் பாஜக மீண்டும் அவரை களமிறக்கியுள்ளது.
சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டே நடித்தேன். ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.