India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணி 2013 முதல் அனைத்து முதல் போட்டிகளிலும் தோல்வியடைந்து வருகிறது. GTக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியில் MI அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த GT அணி 168 ரன்கள் குவிக்க, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய MI அணி 162 ரன்களில் ஆட்டமிழந்தது. 2013 முதல் இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி, ஒரு முறைகூட முதல் போட்டியில் வென்றதில்லை.
விருதுநகர் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், சூரியவம்சம் படத்தில் வரும் சின்ராசு போல் நாட்டாமை சரத்குமார், தன்னை தட்டிக் கொடுத்து தேர்தலில் நிற்க வைத்ததாக கூறினார். முன்னதாக, சூர்யவம்சம் படத்தில் மனைவியை படிக்க வைத்து கலெக்டராக்கியதுபோல, ராதிகாவை எம்.பி.யாக்குவேன் என சரத்குமார் சூளுரைத்திருந்தார்.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனையாகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க மாணவர்கள் தேர்வறைக்கு அரைமணிநேரம் முன்பே செல்லுங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.
தேர்தல் பத்திர நன்கொடை குறித்து திமுக மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய அளவில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான லாட்டரி மார்டினிடம் இருந்து திமுக அதிக நன்கொடை பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக விளக்கம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாக பயன்படுத்தி, நம்பிக்கையோடு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க தொண்டர்களோடு தொண்டராக துணை நிற்கவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடையவும், தொழில் வளர்ச்சியிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் தென்சென்னை வீறுநடைபோடவும் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஆளுநராக இருந்த தான் அக்காவாக திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக அச்சிடப்பட்ட போஸ்டரில் இந்திய தேசிய லீக்கின் தடா ரஹிம் புகைப்படமும் இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், 3 ஆண்டுகளாக திமுகவை எதிர்த்து வருகின்றேன். அதுமட்டுமல்ல, இந்திய தேசிய லீக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், எனது போட்டோவை ஏன் பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்று (மார்ச் 25) முதல் மே 2ஆம் தேதி வரை நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 – மாலை 4.30 வரை நடைபெறும். குறைந்தபட்சம் 40 மாணவர்கள் ஒரு பயிற்சி மையத்தில் இடம்பெற வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நெல்லை மற்றும் விளவங்கோடு (இடைத்தேர்தல்) உள்ளிட்ட 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்., இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் நயினார் போட்டியிடுவதால், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான நபரை காங்., தேர்வு செய்துள்ளதாம். நெல்லையில் ஸ்டாலின் இன்று மாலை தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதால், அதற்குள் வேட்பாளர் பெயர் வெளியாக வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.