News November 9, 2025

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

image

SIR-க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், CM ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், SIR பணிகளை மேற்பார்வை செய்வது, பூத் கமிட்டி, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News November 9, 2025

மழைக்காலத்திற்கு அவசியமான கசாயம்!

image

சுக்கு மல்லி கசாயம் சளி, இருமலை குறைத்து, செரிமானத்தை கூட்டி, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ★தேவையானவை: சுக்கு, மல்லி, சீரகம் ★செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, அதை ஆறவைத்து, வடிகட்டி தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை 2 வேளை பருகலாம். SHARE IT.

News November 9, 2025

6-வது வாரமாக முடங்கி கிடக்கும் அமெரிக்க அரசு

image

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியதாக பெருமிதம் தெரிவிக்கும் டிரம்ப், சொந்த நாட்டு பிரச்னையை தீர்க்காமல், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை தவிக்க விட்டுள்ளார். அமெரிக்காவில் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான மானியங்களை நீட்டிக்கும் விவகாரம் தொடர்பாக டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சி இடையே நீடிக்கும் மோதலால், அரசாங்கத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், 6-வது வாரமாக அமெரிக்க அரசு முடங்கியுள்ளது.

News November 9, 2025

நாட்டின் கணினி அறிவியல் ‘பிதாமகன்’ காலமானார்

image

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.

News November 9, 2025

உடல் எடையை குறைக்க 5 நிமிடங்கள் இத பண்ணுங்க!

image

ஓட்டப்பயிற்சி செய்வதால் கால்கள் & உடலின் மேல் பகுதி தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைத்து, உடலின் எடை குறைப்பிற்கு உதவுகிறது. இந்த ஸ்பாட் ரன்னிங் என்பது மிகவும் எளிதானது. நின்ற இடத்தில் இருந்தபடியே ஓடுங்கள். ஆனால், ஓடும்போது கால் முட்டியை, முடிந்தளவு நன்றாக மேலே மடக்குங்கள். உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு பெஸ்ட் பயிற்சியாகும். ஆரம்பத்தில் 5 நிமிடங்கள் வரை ஓட்டப்பயிற்சி செய்யலாம்.

News November 9, 2025

மத பிரச்னைகளை தூண்டும் திமுக: நயினார்

image

TN-ல் குற்றங்களை தடுக்காமல், திமுக அரசு மத பிரச்னைகளை தூண்டி விடுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் மொழி, தமிழர்களின் உரிமைகளை வெறும் அரசியல் கருவியாக மட்டுமே திமுக கருதுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழர் உரிமைகள் குறித்து பேசும் திமுக, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்ததே அது என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 9, 2025

+2 தேர்வு: வருகைப்பதிவை பொறுத்தே ஹால்டிக்கெட்

image

பள்ளிக்கு முறையாக வரும் +2 மாணவர்களுக்கே ஹால்டிக்கெட் தர பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. முன்னதாக பள்ளிக்கு குறைவான நாட்களே வந்தாலும், அவர்களின் எதிர்கால நலனுக்காக ஹால்டிக்கெட் தரப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 2026-ல் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என கல்வித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

News November 9, 2025

உங்கள் வீட்டு பாத் ரூமில் உடனே இதை மாத்துங்க

image

பற்களின் நன்மைக்காக தினமும் பல் தேய்ப்பதை போல, அதற்கு பயன்படும் பிரெஷ் சரியாக இருக்கிறதா என்பதை கவனிப்பதும் அவசியம். டூத் பிரஷை 3 மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். பழைய பிரெஷ்களில் பாக்டீரியா, பூஞ்சைகள் இருப்பதால், அது உடல் நலத்தை பாதிக்கலாம். அதே போல, 3 மாதங்கள் ஆகவில்லை என்றாலும், நோய் வாய்ப்பட்டு குணமாகும் பிறகும், பிரெஷை மாற்றுவது அவசியம். SHARE IT.

News November 9, 2025

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைகின்றனர்: முத்துசாமி

image

அதிமுகவிலிருந்து பலர் திமுகவில் இணைய உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த திமுக பம்பரமாக சுழன்று வருகிறது. இதனிடையே, செங்கோட்டையன் விவகாரத்தால் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் முத்துசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை இந்த கருத்து உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் ஈரோட்டில் மாபெரும் இணைப்பு விழாவுக்கு திமுக தயாராகி வருகிறதாம்.

News November 9, 2025

திமுகவில் சேரவில்லை என்பதை உறுதி செய்தார் OPS

image

தான் திமுகவில் இணையவிருப்பதாக கூறப்படுவது வதந்தி என OPS திட்டவட்டமாக கூறியுள்ளார். அவரது வலது கரமாக செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் இணைந்தார். ஏற்கெனவே CM ஸ்டாலினை, OPS சந்தித்து பேசியிருந்த நிலையில், அவரும் திமுகவில் இணைய உள்ளார் என தகவல் பரவியது. இதனிடையே, அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பலரும் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

error: Content is protected !!