News May 7, 2024

இந்தியாவை சூப்பர் பவர் கொண்ட நாடாக மாற்றுவோம்

image

2027க்குள் இந்திய உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என உலகளாவிய நிறுவனங்கள் பேசிவருவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2014 வரை காங்., ஆட்சி செய்தபோது பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் இருப்பதாகக் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்தியாவை சூப்பர் பவர் கொண்ட நாடாக மாற்ற விரும்புவதாகக் கூறினார்.

News May 7, 2024

தாமதமாக வழங்கியதாக ₹1 லட்சம் அபராதம்

image

பயணியின் உடைமைகளைத் தாமதமாக வழங்கியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் துபாய்க்கு சென்றுள்ளார். தனது உடைமைகள் தாமதமாக வழங்கப்பட்டதால் வேலையை சரியான நேரத்தில் முடிக்க இயலவில்லை எனக்கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

* ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
* கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்.
* பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு, ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடலாம்.
* சமூகத்தால் நிகழ்த்தப்படும் சர்வாதிகாரம், அரசியலால் செய்யப்படும் சர்வாதிகாரத்தை காட்டிலும் கொடியது.

News May 7, 2024

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி

image

வங்க தேசம் மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டி தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டதால் போட்டி 14 ஓவராகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்க தேசம் அணி 14 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

News May 7, 2024

இதைக் குடிப்பது இவ்வளவு நல்லதா?

image

கோடை காலத்தில் உலர் திராட்சையை நீரில் ஊறவைத்த நீரை குடித்துவர உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நீருக்கு குளிரிச்சியைத் தன்மை உண்டு என்பதால் கோடை காலத்தில் உடல் வறண்டு போவதைத் தடுத்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், நார் சத்து அதிகமாகவும் இருப்பதால், செரிமானப் பிரச்னை, மலப் பிரச்னையைத் தீர்க்கும்.

News May 7, 2024

அவர்களிடம்தான் கேட்க வேண்டும்

image

பாடலுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக இளையராஜா, வைரமுத்து இடையேயான பிரச்னை குறித்து நடிகை குஷ்பு சுவாரஷ்யமாகப் பதிலளித்துள்ளார். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே டீம் வொர்க்தான் என்றவர், இளையராஜா, வைரமுத்து இடையே போர் போய்க்கொண்டிருக்கிறது என்றால் அவர்களிடம்தான் இதுகுறித்து கேள்வி கேட்கவேண்டும் எனக் கூறினார். மேலும், இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளராக நான் தலையிட முடியாது என்றார்.

News May 7, 2024

வரலாற்றில் இன்று: மே 7

image

➤ 1861 – நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.
➤ 1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பர்க்கில் அறிமுகப்படுத்தினார்.
➤ 1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 2000 – விளாதிமிர் புதின் ரஷ்யாவின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.

News May 7, 2024

குஜராத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

குஜராத் உள்பட 12 மாவட்டங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 16 பள்ளிகளின் வளாகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.

News May 7, 2024

பாஜக 150 இடங்களில் கூட வெற்றிபெறாது

image

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை சாடினார். மேலும், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 150 இடங்களில் கூட வெற்றிபெறாது என்றார்.

News May 7, 2024

அவரது வருகையால் பாக்., அணி வலுப்பெறும்

image

பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் வருகையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலும் வலுப்பெறும் என பாக்., அணி கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அனுபவமிக்க பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பாக்., அணியின் பயிற்சியாளராக இணைந்துள்ளது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், உலகக்கோப்பைக்கான திட்டங்கள், யுக்திகள் குறித்து அவர் அணி நிர்வாகத்திடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்றார்.

error: Content is protected !!