News May 6, 2024

மும்பை அணி அபார வெற்றி

image

ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 102*, திலக் வர்மா 37* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, MI 17.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

News May 6, 2024

உயிருக்கு ஆபத்தில்லாத இந்திய நாய் இனங்கள்

image

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நாய் இனங்கள், நமது நாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவை மட்டுமல்லாது, வீட்டில் வளர்ப்போருக்கு விசுவாசமானதாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத நாய்களாகவும் கருதப்படுகின்றன. அதில் சில நாய் இனங்களை தெரிந்து கொள்வோம். * ராஜபாளையம் நாய் *கோம்பை * சிப்பிப்பாறை * கன்னி *இந்தியன் ஸ்பிட்ஸ் *காட்டி குட்டா *முடோல் ஹவுண்ட் *பன்டிகோனா *பன்ஜாரா ஹவுண்ட் * ராம்பூர் ஹவுண்ட்.

News May 6, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – மகிழ்ச்சியான நாள்
*ரிஷபம் – முன்னேற்றம் கிடைக்கும்
*மிதுனம் – நிதானமாக செயல்பட வேண்டும்
*கடகம் – கவலை உண்டாகும்
*சிம்மம் – வெற்றி நிச்சயம்
*கன்னி – திறமை வெளிப்படும்
*துலாம் – சிந்தித்து செயல்படவும்
*விருச்சிகம் – கவனம் தேவை
*தனுசு – சாதகமான நாள்
*மகரம் – தடைகள் அகலும் *கும்பம் – உற்சாகம் ஏற்படும் *மீனம் – செய்யும் செயலில் வெற்றி

News May 6, 2024

உடல் எடையை வைத்து கிண்டல் செய்யாதீர்கள்

image

நோயுடன் போராடி வந்தாலும், தன்னால் முடிந்தவற்றை செய்து வருவதாக மலையாள நடிகை அன்னா ராஜன் தெரிவித்துள்ளார். ஆட்டோ இம்யூன் தைராய்டு நோயுடன் போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இதனால் உடல் எடையில் அடிக்கடி மாறுபாடு வருகிறது என்றார். தனக்கு ஆதரவு தரவில்லை என்றாலும், காயப்படுத்த வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர், அய்யப்பனும் கோஷியும், மதுர ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

News May 6, 2024

லாக்கர் வசதிக்கு நிபந்தனை விதிக்கும் வங்கிகள்

image

பொதுத்துறை, தனியார் வங்கிகளில் உள்ள லாக்கர்களை அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம். ஆனால் அண்மைக் காலமாக இந்த நிலை மாறி வருவதாகவும், மியூச்சுவல் பண்ட், காப்பீடு போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் தான் லாக்கர் தரப்படுமென வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிபந்தனை விதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீங்கள் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொண்டீர்களா?

News May 6, 2024

13 மாவட்டங்களுக்கு நாளை இரட்டை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 6, 2024

₹15 லட்சத்தில் 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த மஹிந்திரா

image

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, XUV700 MX புதிய வேரியண்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் சோரூம் விலை ₹15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது XUV700 AX3 வேரியண்ட் கார் விலையுடன் ஒப்பிடுகையில் ₹3 லட்சம் குறைவாகும். XUV700 MX மாடலில் இதுவரை 5 சீட்டர் காரையே மஹிந்திரா விற்பனை செய்து வந்தது. ஆனால், தற்போது 7 சீட்டர்களாக அதை மாற்றியமைத்துள்ளது.

News May 6, 2024

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அம்சம்…

image

தங்கள் பிள்ளைகளை செல்லமாக வளர்க்கும் அனைத்து பெற்றோரும் செய்யும் மிக முக்கியமான தவறு குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கித் தருவது.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களுக்கும், ஆசையில் வாங்கும் பொருட்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. எனவே, அவர்களுக்கு ஒரு குறிக்கோளை கொடுத்து, அந்த குறிக்கோளை அடையும் பட்சத்தில் அவர்கள் விரும்பியதை அளிப்பதாக கூறுவது நல்லது.

News May 6, 2024

சுய நினைவு இல்லாததால் தீவிர சிகிச்சை

image

விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல்நிலையில், தற்போது வரை முன்னேற்றம் ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்த அவரது சகோதரி, அனைவரது பிரார்த்தனையும், ஆதரவும் தொடர்ந்து தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். முடிந்தால், நிதியுதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

News May 6, 2024

ஆகஸ்ட் மாதம் 4ஜி சேவை தொடங்கும் பிஎஸ்என்எல்

image

இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்டமாக பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் 4ஜி சேவையை அளித்து வருகிறது. முழு வீச்சில் இன்னும் 4ஜி சேவையை தொடங்கவில்லை. இதனால், பிஎஸ்என்எல் எப்போது முழுவீச்சில் 4ஜி சேவையை தொடங்குமென எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!