India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக கூட்டணியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சி இணையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை ராஜ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர்ந்து, தெற்கு மும்பை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாராவுக்கு ரூ.200 கோடி சொத்துகள் உள்ளன. மனசின்னகரே என்ற மலையாள படம் மூலம் 2003ல் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் ஐயா படம் மூலம் 2005இல் களம் கண்டார். இதுவரை 75 படங்கள் நடித்துள்ள நயன்தாரா, டாடா ஸ்கையின் 50 வினாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கினார். இதேபோல் படம் ஒன்றுக்கு ரூ.10 கோடி சம்பளமாகப் பெறுகிறார். அவருக்கு ரூ.200 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.
மக்களவை தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்திற்கு பதில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சின்னமும் தற்போது கிடைக்காததால், வேறு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்பது என்பது குறித்து நாதக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் கிடைக்கும் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் வாக்கு விகிதம் கணிசமாகக் குறையும். வடக்கில் உ.பி., எப்படியோ அதேபோலத்தான் தெற்கில் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் காலூன்றினால் தென்னிந்தியாவைப் பிடித்துவிடலாம் என பாஜக நினைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த முதல் மலையாள படம் எனும் வரலாற்று சாதனையை மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் படைத்துள்ளது. கடந்த மாதம் வெளியான அந்தப் படம், 12 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்தது. இதையடுத்து 26 நாள்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,320ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சிகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜக 10 ஆண்டுகளில் செய்த சாதனையின் பலனாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். சேலம் கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், பாஜகவிற்கு கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் பேச்சாக இருப்பதாக அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் புதிய சின்னத்துடன் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ம் தேதி நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாதக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. எனினும், அதில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் நாதக முடிவை மாற்றியுள்ளது.
ஐபிஎல்லில் வர்ணனையாளராக நவ்ஜோத் சிங் சித்து செயல்படவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர், காங்கிரஸில் சேர்ந்து முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராக செயல்படவுள்ளார். ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை பரப்பியதால் மான நஷ்ட ஈடாக ₹1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் லைகா குறித்து கருத்து தெரிவிக்கவும் சவுக்கு சங்கருக்கு தடை விதித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.