News March 18, 2024

மீண்டும் தலைவரானார் நடிகர் ராதாரவி

image

தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-26ஆம் ஆண்டுக்கான சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 1,021 வாக்குகள் பதிவானது. இதி்ல், 662 வாக்குகள் பெற்ற ராதாரவி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணராஜ் 36 வாக்குகளும் பெற்றனர்.

News March 18, 2024

உலக வரலாற்றின் பொன்னான பக்கங்கள்

image

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது உலக வரலாற்றின் பொன்னான பக்கங்கள் என ஆர்.ஆர்.எஸ் அமைப்பு பாராட்டியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தின் இடைவிடாத போராட்டம்,தியாகம், மற்றும் மகான்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடு தழுவிய இயக்கங்கள், பல்வேறு பிரிவுகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானதாக கூறப்பட்டுள்ளது.

News March 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 18, 2024

5ஆவது முறை ரஷ்ய அதிபராகிறார் புதின்

image

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவாரென தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போர், கருத்து சுதந்திரம் முடக்கத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டன. ரஷ்ய அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

News March 18, 2024

இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜக தான்

image

இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜக தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய அவர், ‘இந்தியாவை மீட்டெடுக்கும் இந்த பயணத்தில் திரண்ட கூட்டத்தை பார்த்து பாஜக அச்சம் கொண்டுள்ளது. விரைவில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும். 10 ஆண்டுகளில் மோடி செய்த காரியம், வெளிநாட்டுப் பயணங்கள், பொய் பிரச்சாரம் மேற்கொண்டது மட்டும் தான்’ என்றார்.

News March 18, 2024

ஒரே நாளில் 16 முறை சூரிய உதயம்

image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள வீரர்கள், ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தையும், சூரியன் மறையும் நிகழ்வையும் எதிர்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி நிலையம், பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதனால் 16 முறை சூரிய உதயத்தையும், சூரியன் மறையும் நிகழ்வையும் வீரர்கள் எதிர்கொள்கின்றனர். எனினும், க்ரீன்விட்ச்(GMT) நேரத்தை கடைபிடிப்பதால் கண்விழிப்பது, தூங்குவதை சீராக தொடர்கின்றனர்.

News March 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாதென ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம் ➤ அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை ➤ EVM இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாதென ராகுல் பேச்சு ➤ மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் வாங்கியதாக இபிஎஸ் குற்றச்சாட்டு ➤கேரளாவில் ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய் ➤ WPL தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு அணி.

News March 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 18, 2024

EVM இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது

image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாதென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், ‘இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகின்றனர். பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித், பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை. நீங்கள் நினைப்பதை நான் செய்வேன். இது அன்பை பரப்புகின்ற தேசம்’ என்றார்.

News March 18, 2024

‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புகள் 80% நிறைவடைந்ததால், ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!