India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்முடிக்கு தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை, இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது என அதிமுக வழக்கறிஞர் அணி கூறியுள்ளது. குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு பதவிப் பிரமாணம் செய்தால், அதற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது. சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் 10 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல் தனித்துபோட்டியிட்டு தோல்வியடைந்தது. 2019ல் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்தபின் அனுஷ்கா நீண்ட நாள்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார். குழந்தைகளுக்காக அவர்கள் அங்கு குடியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பெரும் தொகை செலவழித்து குடியுரிமை பெற உள்ளார்களாம். கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டும் கோலி இந்தியா வருவார் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் புலிப்படை அமைப்பு, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நேற்று இரவு அறிவித்துள்ளன. இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து இரு அமைப்பின் தலைவர்களும் ஆதரவு கடிதத்தை அளித்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், SDPI, அகில இந்திய ஃபார்வாட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவும் இக்கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.
பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடலுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர், 54 அடி நீளமான தோசையே, உலகின் நீளமான தோசையாக சாதனை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் ராமதாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார் ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார் ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ மஞ்சும்மெல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்குநர் பாக்யராஜ் கருத்து
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி, NDA கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (மார்ச் 20) முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இதுவரை கூட்டணி குறித்து இறுதி செய்யாமல் திணறி வரும் தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்னும் சற்றுநேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். நேற்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலை குழு கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. பாமக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிக்கவுள்ள ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்ல பலனை அளிக்கிறது. நார்ச்சத்து, இரும்புசத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் கொண்ட வெந்தயக் கீரை, உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுவதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்றாக குறைக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு நாள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும்.
Sorry, no posts matched your criteria.