India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
007 ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க பிரிட்டன் நடிகர் ஆரோன் டைலர் ஜான்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜேம்ஸ் பாண்டின் அதிரடி சண்டை காட்சிகள், உலகம் முழுவதும் அந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்களை தேடி தந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க போவதில்லை என டேனியல் கிரெய்க் தெரிவித்து விட்டார். இதனால் டெனட் படத்தில் நடித்த ஆரோனை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.
தமிழக மக்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், பிரிவினைவாதப் பேச்சுகளை இனிமேல் யாரும் பேசாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தமிழர்களே காரணம் என ஷோபா பேசியிருந்தார்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகையன்று (மார்ச் 25) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ரிஷபம், துலாம், விருச்சிகம், மீன ராசியினர் வாழ்வில் கொந்தளிப்பை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக மன அழுத்தம், உடல் நலம் சார்ந்த தொல்லை, வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, கொடுக்கல் வாங்கலில் தகராறு, தீராத கடன் பிரச்னை போன்ற பல சிரமங்களை மேற்கண்ட ராசியினர் எதிர்கொள்ள உள்ளனர்.
2024 ஐபிஎல் தொடருக்கான லோகோவை, பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ‘RCB Unbox’ நிகழ்ச்சியில், வீரர்கள் அனைவரும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து வந்தனர். பின்னர், RCB அணியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. அதில், இருந்த ‘Bangalore’ என்ற வார்த்தையை தற்போது ‘Bengaluru’ என மாற்றப்பட்டுள்ளது. புதுப்புது மாற்றங்களுடன் களமிறங்கும் RCB அணி, இம்முறை கோப்பையை வெல்லுமா?
புஷ்கர் காயத்திரி இயக்கும் ‘சுழல் 2’ வெப் தொடர், அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இத்தொடரின் முதல் பாகம், கடந்த 2022ஆம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, முழுமையாக தயாரான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் நாளை வெளியிடப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். மக்களவைத் தேர்தலில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை உள்பட தமிழகத்தில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார். ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை நடத்தி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதியாக, ஆளுநர் மாளிகையை நோக்கி கைக்கூப்பி வணங்கி தமிழிசை விடைபெற்றார்.
135 கோடி மக்களின் ஒரே நம்பிக்கையாக ராகுல் காந்தி திகழ்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய ஒரே தலைவர் ராகுல் தான் எனக் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன்பு லேசான உடற்பயிற்சி செய்வது ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல மிதமான சூட்டில் தண்ணீரையோ, பாலையோ அருந்திவிட்டு தூங்கச் செல்வது வயிற்றை இதமாக்கி தூக்கத்தை மேம்படுத்தும். டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருத்தல், புத்தகம் படித்தல், மனதை சாந்தப் படுத்துதல் ஆகியவை ஆழ்ந்த தூக்கத்திற்கான காரணிகள்.
Sorry, no posts matched your criteria.