News July 9, 2025

தனுஷுடன் இணைந்த ரஜினி பட நடிகர்

image

தனுஷின் லைன்-அப்களில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் உள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், வீர தீர சூரனில் மிரட்டிய சுராஜ் வில்லனாக இதில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இட்லி கடை’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

News July 9, 2025

நீண்ட ஆரோக்கியத்திற்கு காலையில் இத செய்யுங்க..!

image

மூச்சுப்பயிற்சி ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மனக்குழப்பம், அதிகப்படியான யோசனை, பதற்றம் போன்ற தொந்தரவுகளை மூச்சுப்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். இது நுரையீரலுக்கும் மிகவும் நல்லது. மூச்சுப்பயிற்சியை, ஆரம்பத்தில் 3 நிமிடங்கள்- 10 நிமிடங்கள் வரை செய்யுங்க. பின்னர் சில நாள்கள் கழித்து, நேரத்தை அதிகரித்து 10- 20 நிமிடங்கள் வரை செய்யலாம். ட்ரை பண்ணுங்க.

News July 9, 2025

நாடு முழுவதும் ஸ்டிரைக்.. பஸ் சேவை பாதிக்கும் அபாயம்!

image

<<16998000>>17 அம்ச கோரிக்கைகளை<<>> வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இன்று ஸ்டிரைக் நடக்கிறது. TN-ல் CITU, AITUC, LPF உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் நடத்துகின்றன. திமுகவின் LPF கூட இதில் பங்கேற்கிறது. TNSTC பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் தங்களது எதிர்ப்பை காட்ட ஸ்டிரைக் செய்வோம் என CITU, LPF ஊழியர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளதால் பஸ், ஆட்டோ சேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

News July 9, 2025

Bharat Bandh: அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் என்ன?

image

*மத்திய அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும். *தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ₹26,000 வழங்க வேண்டும். *பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். *பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. *100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியை ₹600 ஆக உயர்த்த வேண்டும். *பெட்ரோல், டீசல் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பந்த் நடத்துகிறது.

News July 9, 2025

தமிழக அரசியலில் புதிய பெண் தலைவர்.. பாமகவில் திருப்பம்!

image

அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீகாந்தி களமிறக்கப்பட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முதல் அரசியல் மேடை ஏறிய ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இவரது மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கியதை எதிர்த்துதான் அன்புமணி சண்டையை தொடங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா வரிசையில் பாமகவின் தலைமைக்கு ஸ்ரீகாந்தி வரவுள்ளதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

News July 9, 2025

இந்தியாவுக்கு கூடுதலாக 10% வரிவிதிப்பு: டிரம்ப்

image

இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

’சுரங்கப்பாதைக்கு அனுமதி தராததே விபத்துக்கு காரணம்’

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஓராண்டாக அனுமதி தராததே விபத்துக்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நடப்பாண்டில் கடலூரில் எத்தனை முறை CM ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார்.

News July 9, 2025

அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

image

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. அதிகாலை எழுவதால் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். யோகா, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். பின்பு இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.

News July 9, 2025

ஜூலை 9… வரலாற்றில் இன்று!

image

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.

News July 9, 2025

’அதிகாரிகள் மீது நடவடிக்கை’: அமைச்சர் சேகர் பாபு உறுதி

image

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் புனித நீர் ஊற்ற செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமைச்சர் சேகர்பாபு தனது இல்லத்துக்கு வந்து தன்னை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!