India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நகர மயமாதல், மனிதர்களின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்களால், மனிதர்களைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உங்களுக்கு தான் தூக்கம் தொலைந்து விட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டு போகிறீர்கள் என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு பதிலடி அளித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டதென பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து விடுதலை பெற இந்திய மக்கள் தயாராகி விட்டனர்’ என்றார்.
இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பிரித்விராஜ், அமலாபால் நடிப்பில் ‘ஆடு ஜீவிதம்’ படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரியாத்தில் ஆடு மேய்த்த கொடுமை குறித்து ஆடு ஜீவிதம் படத்தின் நிஜ ஹீரோவான நஜீப், ‘எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காமல் ஆட்டுப் பாலைக் கறந்து அப்படியே குடித்துப் பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாகக் கிடைக்காது. குளிக்காமலே நாள்களைக் கடத்தினேன். ஏறக்குறைய பரதேசி ரேஞ்சுக்கு மாறிவிட்டேன்’ என்றார்.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடருக்கான டிராபி டூர், நியூயார்க்கில் இருந்து தொடங்கியது. 2 முறை T20 உலகக் கோப்பையின் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் மற்றும் அமெரிக்க பந்துவீச்சாளர் அலி கான் ஆகியோர் டிராபி சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்தனர். இந்த டிராபி சுற்றுப்பயணமானது, 4 கண்டங்களில் உள்ள 15 நாடுகளை சென்றடையும். T20 உலகக் கோப்பை தொடர், வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்க உள்ளது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ➤ திமுகவின் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியாகிறது ➤ கோவை வாகனப் பேரணியில் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியதாக புகார். ➤பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பை தமிழர்களுடன் தொடர்புபடுத்திய ஷோபா கரந்த்லாஜே பேச்சால் சர்ச்சை ➤ சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியானது.
சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர், “மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி ஆனந்தன் மகள் தமிழிசையை மேடையில் வைத்துக் கொண்டு வாரிய அரசியலை ஒழிப்போம் என மோடி பேசுவது அவரது நேர்மைக்கான எடுத்துக்காட்டு” எனக் கூறியுள்ளார். மேலும், வெட்கமே இல்லாத ஒருவர் தான் இப்படி பேசுவார் எனவும் சாடியுள்ளார்.
2024 ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சிகளை அனைத்து அணிகளும் வெளியிட்டுள்ளன. மார்ச் 22 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை முதற்கட்ட போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன. வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்னும் 2 நாட்களே உள்ளதால், ஐபிஎல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.