India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதைத் தொடர்ந்து, மார்ச் 22ல் அதிமுக தேர்தல் அறிக்கையும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை நாளைக்குள் அதிமுக நிறைவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
அண்மையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ‘சைத்தான்’ பட நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருந்ததியின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன்வரவில்லை என அருந்ததியின் தோழியும், மலையாள நடிகையுமான ரம்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார். அருந்ததிக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் மதுரை அருகே மருத்துவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன்கோரி திவாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, சாட்சிகளை கலைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிராக தாக்கலான மனுவை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த பொதுநல மனுவில், இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சின்னத்தை முடக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மனு மீது நாளை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
மத்திய அரசு முறையாக சோதனைகளைச் செய்திருந்தால், நாடு முழுவதும் இந்தளவுக்கு போதைப்பொருள்கள் நிச்சயம் பரவியிருக்காது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “10 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாத மோடி, இங்கு எத்தனை முறை வந்தாலும் எந்தப் பயனுமில்லை. பாஜகவின் பித்தலாட்டம் இங்கு எடுபடாது. இங்கே பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மனுத் தாக்கல் செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவிதா தாக்கல் செய்த மனு மீது வருகிற 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
நான்கரை ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அவர் தெலங்கானா ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட பின் பாஜகவில் இருந்து விலகினார். நேற்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சற்றுமுன் கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார். அவர் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இளையராஜா முதன்முறையாக சென்னைக்கு வருவதை உணர்த்தும் வகையில் போஸ்டர் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி செய்ய இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட சுதீஷ் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.