India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இணைந்துள்ளார். அவர் மீதான நிதி மோசடி வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியதால், பங்குச்சந்தையில் டிரம்ப் நிறுவனங்களின் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் நிகர மதிப்பு ₹33,340 கோடிக்கும் அதிகமானது. இதனால், ₹54,175 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் டிரம்ப் இணைந்தார்.
அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை, பெங்களூரு வீரர் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார். பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 77 ரன்கள் குவித்தார். அணியின் வெற்றிக்கு காரணமான அவருக்கு, ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் மொத்தமாக 98 ரன்கள் எடுத்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கோவை மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டி, பாப்பநாயக்கன்பாளையம் பண்ணாரி அம்மன் குண்டத் திருவிழாவில், தீ மிதித்து வழிபாடு செய்தார். பின், கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார்.
கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் ஜெக்ரிவாலை 21ஆம் தேதி ED கைது செய்தது. இந்த கைதை கண்டித்து பலகட்ட போராட்டங்களை ஆம் ஆத்மி முன்னெடுத்த நிலையில், இன்று பிரதமர் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பிரதமரின் இல்லம் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனது கவர்ச்சிப் படத்தை பதிவிட்டு விமர்சித்த காங்கிரஸை சேர்ந்த சுப்ரியாவுக்கு பாஜக மண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு நடிகையாக அனைத்து விதமான கேரக்டரில் நடிப்பதே என்னுடைய பணி. கவர்ச்சியாக, வீரமாக, பெண்ணியவாதியாக என அனைத்து விதமாகவும் இந்த 20 ஆண்டுகளில் நடித்துள்ளேன். எனவே, கவர்ச்சிப் படத்தைப் போட்டு கொச்சைப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி மேலும் 10 ஆண்டுகள் நீடித்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது சந்தேகம் தான் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமும் பாஜகவிடம் இல்லை. வேலைக்காக இளைஞர்கள் காத்திருந்தே அவர்களுக்கு வயதாகி விட்டது. எதற்கும் பயனில்லாத பாஜக அரசை அகற்றுவதே இதற்கு தீர்வு என அவர் கூறினார்.
கடந்த ஒருவாரமாக அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹49,600க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹6,200க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிரா, வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ₹80.50க்கும், கிலோ வெள்ளி ₹300 குறைந்து ₹80,500க்கும் விற்பனையாகிறது.
செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என துரை வைகோ திமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் திமுக, மதிமுக தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து துரை வைகோ கூறும்போது, அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது என்று தெரிவித்தார்.
வாரத்தின் 2ஆவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றம், இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 72,631 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளி உயர்ந்து 22,096 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Oil India Ltd உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘The GOAT’. இதில் இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பது ஃபர்ஸ்ட் லுக் மூலம் தெரிய வந்தது. இந்நிலையில், படத்தின் அப்டேட் பற்றி கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்வதாக தெரிகிறது. இதுகுறித்து வெங்கட் பிரபு, ‘அநியாயம் பண்ணாதீங்க நண்பா, நண்பீஸ். மிக விரைவில் அப்டேட் வரும். என்னை நம்புங்கள், நிச்சயம் அது சிறப்பான அப்டேட்டாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.