India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுகவினரிடம், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் உள்பட 5 பேரும், அலுவலரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர்.
தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ₹6000, குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ₹6000, குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ₹2000 ஆக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேறு காலத்தில் 3, 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
▶ உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது: எடப்பாடி பழனிச்சாமி
▶2 கோடி வேலைவாய்ப்பு எனக்கூறி மோடி இளைஞர்களை ஏமாற்றியுள்ளார்: பிரேமலதா
▶நீட் தேர்வு விலக்கு எனும் கண்கட்டி வித்தையை திமுக காண்பித்து வருகிறது: அன்புமணி
▶விரைவில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை நடைபெறும்: மத்திய அரசு
▶மகளிர் உரிமைத் தொகையால் உள்ளூர் பொருளாதாரம் உயர்வு: கார்த்தி சிதம்பரம்
▶ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
உதவிப் பேராசிரியா் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தோ்வுக்கு (SLET) விண்ணப்பிக்கலாம். அதன்படி 43 பாடங்களுக்கான SLET தகுதித் தோ்வு, வரும் ஜுன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் <
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாமே, இனிமேல் ஆட்சிக்கு வந்து மீட்பேன் என்றால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், தேர்தல் நேரத்தில் தான் மோடிக்கு ஞானோதயம் வந்ததா?. கச்சத்தீவு தமிழக மீனவர்களுக்கு வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. உலக நீதிமன்றத்தை நாடி கச்சத்தீவை மீட்போம் எனத் தெரிவித்துள்ளார்.
தனக்குக் கிடைத்த விருதை ஏலத்தில் விட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “முதல் முறையாக சிறந்த நடிகருக்காக கிடைத்த பிலிம்பேர் விருதை ஏலம் விட்டோம். அதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்கள். அந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன். விருதுகள் மீது எனக்கு ஆசை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
▶ஏப்ரல் – 2, பங்குனி – 20
▶கிழமை – செவ்வாய்
▶நல்ல நேரம்: 10:30 AM-11:30 AM, 4:30 PM-5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM-2:30 AM, 7:30 PM-8:30 PM
▶ராகு காலம்: 3:00 PM- 4:30 PM
▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM
▶குளிகை நேரம்: 12:00 PM – 1:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: அஷ்டமி
▶நட்சத்திரம்: 10:48 PM வரை பூராடம் பிறகு உத்திராடம்
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் போபண்ணா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2ஆவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார். அவருடன் இணைந்து ஆடும் ஆஸி.,வீரர் மேத்யூ எப்டென் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14,000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ₹2,000 ஆக வழங்கப்படவுள்ளன. மேலும், பேறு காலத்தில் 3 மற்றும் 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும் என விஜயபிரபாகரன் கூறியுள்ளார். சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “உங்களை பார்த்து பேசுவது, சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது. நாம் அனைவரும் உறவினர்கள் தான். மக்களவையில் உங்களது குரலாக எனது குரல் ஒலிக்கும். மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் நீண்ட நாள் கனவு” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.