News April 3, 2024

காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்துவிட்டது

image

காங்கிரஸ் கட்சியினர் பெண்களை மதிப்பதில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார். சிம்லாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் நலனுக்காக உழைப்பார்களா? அவர்கள் நாட்டை சீரழித்துவிட்டனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார். நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பிரதமர் மோடி சாதாரண மனிதர் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

image

▶இளநீர் குடிப்பதால் உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் பிரச்னையை சரி செய்ய உதவும்.
▶எலுமிச்சை சாறில் உள்ள வைட்டமின் சி, உங்கள் உடல் சூட்டைத் தணிக்கும்.
▶மோரில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதிக எனர்ஜி கிடைக்கும்.
▶நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
▶சீரக தண்ணீர் குடிப்பது நல்லது.
▶மாங்காய், மாம்பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

News April 3, 2024

‘இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

image

கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா தரத்திற்கு உருவாகியுள்ள இப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதில், கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், அனிருத் இசையமைத்துள்ளார்.

News April 3, 2024

ரொனால்டோ அணி அபார வெற்றி

image

சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில், ரொனால்டோவின் அல் நாசர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ‘அபா’ (Abha) அணிக்கு எதிரான லீக் போட்டியில், அல் நாசர் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, வரிசையாக 3 கோல்களை அடித்து அசத்தினார். இது ரொனால்டோவின் 65ஆவது ஹாட்-ட்ரிக் கோல் ஆகும். கடைசி வரை எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல், 8-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

News April 3, 2024

2 ஐ.ஜி., 12 எஸ்.பி., 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

image

ஆந்திரா உள்பட 5 மாநிலங்களில் 2 காவல்துறை ஐ.ஜி.கள், 8 மாவட்ட ஆட்சியா்கள், 12 எஸ்.பி.களை பணியிடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை முறையாக பின்பற்றாத மாநிலங்களில் அரசு அதிகாரிகளை தோ்தல் ஆணையமே பணியிடமாற்றம் செய்துள்ளது.

News April 3, 2024

ஏப்ரல் 3: வரலாற்றில் இன்று

image

1505 – இலங்கையில் முதல் முறையாக போர்ச்சுகீசியர்கள் வந்திறங்கினர்.
1933 – ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 – ஜப்பான் படையினர் அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் படை மீது தாக்குதல் நடத்தினர்.
1948 – தென் கொரியாவில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
1958 – ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சி ராணுவம் அவானா மீது தாக்குதல் நடத்தியது.

News April 3, 2024

புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்

image

மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், “கச்சத்தீவை பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது. திமுகவினர் உண்மையை மூடி மறைக்கின்றனர். இது வெறும் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசும் பிரச்னை அல்ல. புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News April 3, 2024

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

‘குக் வித் கோமாளி’ புகழ் நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகளைக் கவரும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News April 3, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 124
▶குறள்: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
▶விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாமல், அடக்கத்துடன் வாழ வேண்டும். அப்படி வாழ்பவரது மனது, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

News April 3, 2024

₹12,000 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே

image

ரயில் சேவைகள் மூலம் 2023-24ஆம் நிதியாண்டில், ₹12,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 10% அதிகமாகும். பயணிகள் ரயில் சேவை மூலம் ₹7,151 கோடி, சரக்கு ரயில்கள் மூலம் ₹3,674 கோடி, இதர வருவாய் மூலம் ₹1,194 கோடி வசூலாகியுள்ளது. இதுதவிர, பாரத் கவுரவ் ரயில்கள் மூலம் ₹34 கோடி, ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் ₹20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!