India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ – டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால், ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களையும் வாடகை கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
யாரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் முடிவு செய்வார்கள், அதில் யாரும் தலையிட கூடாது என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஐபிஎல் என்பது முதலில் இந்திய அணி கிடையாது என்று கூறிய அவர், பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தேவையில்லாதது என்றார். பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்ததில், மும்பை அணி தெளிவான திட்டமிடலுடன் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் தமிழக வருகை உறுதியாகவில்லை, உறுதியானவுடன் சொல்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தர உள்ளதாகவும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, ஏப்.9, 10, 13, 14ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், எப்போதுதான் தங்கத்தின் விலை குறையும் என ஏங்கி தவித்து வருகின்றனர். ஆனால், 2025ஆம் ஆண்டு இறுதி வரை தங்கத்தின் விலை உயரவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் சிறுக சிறுக தற்போதே தங்கத்தை சேமிக்க தொடங்குவது புத்திசாலித்தனம் என்கிறார்கள்.
பிரதமர் மோடி ரோடு ஷோ செல்வதை போல் முதல்வர் ஸ்டாலினை 10 கி.மீ ரோடு ஷோ வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். ரோடு ஷோ வருவதற்கும், மக்களை சந்திக்கவும் முதல்வர் ஸ்டாலின் பயப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், முதல்வர் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக அலை வீசுவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எந்த பகுதிக்கு சென்றாலும், மக்களின் ஆதரவு உற்சாகமாக இருப்பதாக தெரிவித்த அவர், வழக்கம் போல் கொங்கு மண்டலத்தில் அதிமுக வரலாற்று வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், சேலம் தொகுதியில் அதிமுவுக்கு வரலாற்று வெற்றியை பொதுமக்கள் வழங்கி திமுகவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
புகழ்பெற்ற நீரியல் நிபுணரும், பேராசிரியருமான முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலை.,யில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்ற சிவனப்பன், அமெரிக்க பல்கலை.,களில் நீர் மேலாண்மை, நவீன பாசன, வடிகால் முறைகள் ஆகியவை பற்றி சிறப்பு அறிவியல் பயின்றவர். சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய கருத்துகளை உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அரிய சாதனையை நேற்று படைத்துள்ளார். ஆம்! ஒரே மைதானத்தில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். RCBயின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கிங் இந்த மைல்கல்லை எட்டினார். ரோஹித் சர்மா (வான்கடே-80 போட்டிகள்), தோனி (சேப்பாக்-69 போட்டிகள்) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் சாண்டி மாஸ்டர் மாஸ் காட்டி இருப்பார். விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலுக்கு சூப்பராக நடனம் அமைத்திருந்தார். லியோ படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்நிலையில் தலைவர் 171 படத்தில் நடிகரா? நடன இயக்குநரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சாண்டி, சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது என்றார். மொத்தத்தில் ரஜினி படத்தில் சாண்டி இணைவது உறுதியாகியுள்ளது.
பெரியார் மண்ணில் பாஜகவின் வேஷம் எடுபடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார். கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பாஜகவினர் விவாதப் பொருளாக கொண்டு செல்ல பார்க்கிறார்கள். 10 வருடங்களாக ஆட்சி செய்கின்ற பாஜக கச்சத்தீவை மீட்டு கொண்டு வர வேண்டியது தானே? என அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் வரும் போது மட்டுமே பாஜகவினருக்கு தமிழகம் நினைவுக்கு வரும் என்ற அவர், பாஜக தேர்தலில் படுதோல்வி அடையும் என்றார்.
Sorry, no posts matched your criteria.