News April 3, 2024

பாஜகவின் வாஷிங் மெஷின் தோலுரிக்கப்பட்டது

image

பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜகவில் இணைந்தவர்களில் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதை குறிப்பிட்டு பேசிய முதல்வர், ‘ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்கள் ஆக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என்று கூறுவதா? என பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 3, 2024

வெயில் காரணமாக மின் நுகர்வு அதிகரிப்பு

image

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தியாவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 4,262 மில்லியன் யூனிட்களாக இருந்த மின் நுகர்வு, தற்போது 4,722 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மின் நுகர்வு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோடையில் அதிகபட்சமாக 243 ஜிகா வாட் மின் நுகர்வு இருந்தது.

News April 3, 2024

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது வரலாற்றுப் பிழை

image

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது வரலாற்றுப் பிழை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், கச்சத்தீவை பற்றி பேசினாலே திமுகவுக்கு கோபம் வருவதாக விமர்சித்தார். பாஜக கூட்டணி மீண்டும் வென்றால் கச்சத்தீவு விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

News April 3, 2024

நிலநடுக்கத்தில் 9 பேர் பலி

image

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் சிக்கி அவர்கள் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் இன்று காலை பதிவானது.

News April 3, 2024

5 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்

image

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 39-41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பகல் வேளையில் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News April 3, 2024

“மேடை நாகரிகமே நம் பண்பாடு”

image

தேர்தல் பரப்புரையில் மறைந்த தலைவர்களை பழிப்பது ஏற்றத்தக்கதல்ல என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து X தளத்தில், ஜப்பானில் நிலநடுக்கம், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்படுவதைப் போல, தேர்தல் பரப்புரை மேடைகளில் தலைவர்களை இழிவாக பேசுவது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், மறைந்த தலைவர்களை பழிப்பது முறையல்ல. சிலர் ரசிப்பர், பலர் வெறுப்பர். மேடை நாகரிகமே தமிழர் பண்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

திராவிட கட்சிகள் மீது ஈர்ப்பு இல்லை

image

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் ராதிகா போட்டியிடுகிறார். இதனிடையே பேட்டி ஒன்றில் அவர், எத்தனையோ கட்சிகளில் இருந்து சேரும்படி கேட்டதாகவும், தனக்கு அதில் ஆர்வம் இல்லாததால் சேரவில்லை என்றும் கூறினார். மேலும், திராவிட கட்சிகள் மீது ஈர்ப்பு இல்லாததால் தான் அவற்றை தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், சமகவினர் பலரும் பாஜகவில் இணைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

News April 3, 2024

பாஜகவில் இருந்து எம்.பி விலகல்

image

மகாராஷ்டிராவில் பாஜகவில் சீட்டு மறுக்கப்பட்ட நடப்பு எம்.பி உன்மேஷ் பாட்டில் கட்சியில் இருந்து வெளியேறினார். இன்று காலை அவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து சிவ சேனாவில் (உத்தவ் தாக்கரே அணி) தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே பாஜக கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் ஏக்நாத் தலைமையிலான சிவசேனாவும் எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் உன்மேஷின் விலகல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News April 3, 2024

ஆண் குழந்தைகளுக்கான அசத்தல் சேமிப்புத் திட்டம்

image

செல்வ மகள் சேமிப்பு திட்டம் அனைவரும் அறிந்ததே. இதன் வெற்றியைத் தொடர்ந்து பலரும் ஆண் பிள்ளைகளுக்கான திட்டம் இல்லையா? என கேட்கத் தொடங்கினர். அதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பொன்மகன் சேமிப்பு திட்டம். இதில் ஆண்டுக்கு ரூ.500 – ரூ.1,50,000 வரை சேமிக்க முடியும். சராசரியாக 7.1% வட்டி வழங்கப்படும். 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உண்டு.

News April 3, 2024

6 பன்னீர்செல்வங்களின் ஆசீர்வாதத்தால் பலாப்பழம்

image

இராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டியூரில் பிரசாரம் செய்த அவர், குழப்பம் விளைவிப்பதற்காகவே பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்டவர்களை களம் இறக்கியுள்ளதாக தெரிவித்தார். தனக்கு மட்டும்தான் ’ஓ’ இனிஷியல் என நகைச்சுவையாக கூறிய அவர், 6 பன்னீர்செல்வங்களின் ஆசிர்வாதத்தால் தனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது என்றார்.

error: Content is protected !!