India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஏப்.7ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதன் பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனால் ஏப்.7 அல்லது 11ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் மும்பை அணிக்காக அவர் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
நவ கிரகங்களில் கர்ம நாயகனான சனி பகவான் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இதனால் அடுத்த 400 நாள்களுக்கு மேஷம், ரிஷபம், மகரம், மீன ராசியினருக்கு இடைவிடாமல் பணமழை கொட்டப்போகிறது. தொட்டது துலங்கும் யோகம், மண்ணும் பொன்னாகும் அதிர்ஷ்டம், தொழில், வியாபாரத்தில் அதீத லாபம், திருமண யோகம் போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
“கச்சத்தீவு என் பாட்டன் சொத்து. இலங்கை அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். மயிலாப்பூரில் நாதக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நடக்கத் தெம்பு இருக்கும்போதே பொறுப்பை கொடுத்து விடுங்கள் என்றும் சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள் என்றும் வாக்களர்களை கேட்டுக் கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் 29ஆவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்கெனவே தமிழகம்-கர்நாடகா இடையே பிரச்னை நீடித்து வரும் சூழலில், இந்தக் கூட்டத்தில் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அங்கிரஷ் ரகுவன்ஷி தனது அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 54 ரன்கள் எடுத்தார். பின்னர், 13ஆவது ஓவரில் நோர்க்யா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அறிமுகப் போட்டியிலேயே KKR அணிக்காக அரை சதம் அடித்த 6ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
பிரதமர் மோடியின் சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேலி செய்துள்ளார். திருவண்ணாமலையில் பிரசாரம் செய்து வரும் அவர், “அமலாக்கத்துறை கைதுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று மோடி உருட்டியிருக்கிறார். அதைக் கேட்டு பேட்டி எடுத்தவர்களே ஆடிப் போயிருக்கின்றனர். அந்தப் பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா அல்லது காமெடி டைமா என குழம்பிப் போயுள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார். இக்கட்சி I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகித்திருப்பதால் தனித்துப் போட்டி என்ற முடிவு கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சிதான் தன்னை இந்த முடிவுக்கு தள்ளியதாக மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
தனக்கு வரப்போகும் கணவர் நல்லவனாக இருக்க வேண்டும் என நினைத்தது ஒரு காலம். ஆனால், இன்று பல பெண்கள் வரப்போகும் கணவர் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அந்தவகையில், மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனக்கு ஒரு கோடி (ஆண்டுக்கு) சம்பாதிக்கும் மணமகன் தேவை என கூறிய வாட்ஸ்அப் பதிவு வைரலாகி வருகிறது. நன்கு படித்த, மும்பையில் சொந்த வீட்டில் வசிக்கும் நபர் மணமகனாக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வங்கிகளில் மாநில அரசு வாங்கிய கடனை மத்திய அரசு வழங்கியதாக நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நிவாரண நிதி கேட்டால் ஒரு ரூபாய் கூட வழங்காமல் கந்துவட்டிக்காரர் போல் அவர் கணக்கு கேட்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம், ராமநாதபுரத்தில் ஏற்பட்ட வறட்சி என எதற்குமே மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 272/7 ரன்கள் குவித்துள்ள கொல்கத்தா அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக ரன்கள் குவித்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது (SRH 277). அதிரடியாக ஆடிய நரைன் 85, ரகுவன்ஷி 54, ரசல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் அடித்தனர். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.