News April 4, 2024

டாப் 10 பணக்காரா்கள் பட்டியலில் அம்பானி

image

இந்தியாவின் டாப் பணக்காரராக தொடா்ந்து வரும் ‘ரிலையன்ஸ்’ குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி, உலகின் டாப் 10 பணக்காரா்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அண்மையில், ‘ஃபோா்ப்ஸ்’ (Forbes) இதழ் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துகள் கொண்ட பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், 11,600 கோடி டாலா் சொத்துகளுடன் அம்பானி 9ஆவது இடத்திலும், 8,400 கோடி டாலா் சொத்துகளுடன் கௌதம் அதானி 17ஆவது இடத்தில் உள்ளனர்.

News April 4, 2024

நேருக்கு நேர் மோத முடியுமா?

image

நாம் தமிழர் கட்சியை ஒழித்துவிடுவேன் என அதிகார திமிரில் ஆட வேண்டாமென அண்ணாமலைக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தம்பி அண்ணாமலை நீ எடுத்திருக்கிறது வெறும் போலீஸ் டிரெய்னிங். நான் எடுத்திருக்கிறது போராளி டிரெய்னிங். தைரியமிருந்தால் நேருக்கு நேர் மோத முடியுமா? தமிழகத்திற்கு பாஜக ஏன் தேவைப்படுகிறது என்பதை விவாதிக்க தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 4, 2024

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது

image

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஸ்ரீதேவி என்னைவிட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் பொது வாழ்க்கையைவிட தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் விரும்புபவர். அதனால், அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்கவும் மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

News April 4, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 4, பங்குனி – 22 ▶கிழமை – வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM
▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM
▶குளிகை நேரம்: 9:00 AM – 10:30 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶திதி: ஏகாதசி
▶நட்சத்திரம்: 8:12 PM வரை திருவோணம் பிறகு அவிட்டம்

News April 4, 2024

TNPL கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

image

2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர் அட்டவணை இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது. சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில், லைகா கோவை கிங்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

News April 4, 2024

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு

image

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News April 4, 2024

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சி.வி.சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2024

தினமும் காலையில் அத்திப்பழம் சாப்பிடுங்க

image

▶இதில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. ▶இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு, எலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும். ▶மேலும், உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் தரும். ▶அஜீரணம், மலச்சிக்கலை தடுப்பதோடு, வயிறு மற்றும் குடல் பிரச்னைகள் வராமல் தடுக்கும். ▶ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

News April 4, 2024

IPL: கொல்கத்தா அணியின் வரலாற்று வெற்றி

image

2024 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக முதல் 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், 85(39) ரன்கள் குவித்த சுனில் நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி (6 புள்ளிகளுடன்) முதலிடத்தில் உள்ளது.

News April 4, 2024

சொந்த ஊர் திரும்பிய தமிழக மீனவர்கள்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை, இலங்கை அரசு விடுவித்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் 19 பேரும் நேற்று கொழும்புவில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 19 தமிழக மீனவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

error: Content is protected !!