India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீரழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து நிறைந்த இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாறாக பழைய சாதத்துடன் சிறிது தயிர் கலந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ள தேவையில்லை. அதேநேரம் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி சேர மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தேமுதிகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும் பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். முன்னதாக பாஜக உடன் தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விவகாரம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்து இந்தியாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விவகாரம், அதை மீண்டும் பேச வேண்டாம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் சாப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ₹40,000 – ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்தப் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள இன்ஜினியர்கள், வரும் மே 1ஆம் தேதிக்குள் <
I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் பாதிபேர் சிறையிலும், மீதி பேர் பெயிலில் உள்ளதாக ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். இந்த கூட்டணி ஊழல் தலைவர்களின் அணியாக இருப்பதாக கூறிய அவர், குடும்ப அரசியல்வாதிகளின் கூடாரமாக அரசியலை மாறியுள்ளதாக விமர்சித்தார். ஜாமினில் இருந்து வரும் ராகுல், சோனியா, ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகிறார்களே தவிர மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக சீட் தராததால் அதிருப்தியில் இருந்த அக்கட்சி, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடம் ஒதுக்குவதாக அதிமுக உறுதியளித்த பின் கூட்டணியில் தொடருவதாக அறிவித்தது. இந்நிலையில் புதுவையில் புரட்சி பாரதம் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 17ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஷாருக்கான் உடன் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளார்.
உலக அளவில் முடங்கியிருந்த வாட்ஸ் அப் சேவை, தற்போது சீரானதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாட்ஸ் அப் சேவை முடங்கியதால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான பயனர்கள் மெசேஜ் அனுப்புவதில் சிக்கலை எதிர்கொண்டதாக தெரிவித்திருந்த நிலையில், அனைத்து விதமான பிரச்னைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உங்க வாட்ஸ் அப் ஒர்க் ஆகுதா?
▶தமிழகத்தில் ஏப்.18, 19 அன்று விளம்பரம் வெளியிட அரசியல் கட்சிகளுக்குத் தடை
▶கேப்டனை போல் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபடுவேன்: பிரேமலதா
▶பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்புகின்றனர்: செல்வப்பெருந்தகை
▶தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்
▶நிர்மலா சீதாராமன் கந்துவட்டிக்காரர் போல செயல்படுகிறார்: முதல்வர் ஸ்டாலின்
▶ஐபிஎல்: கொல்கத்தா அணி வெற்றி
Sorry, no posts matched your criteria.