India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் வினாத்தாள் கசிவால், 23 லட்சம் மாணவர்களின் எதிர்கால கனவு சிதைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள மோடி அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், வினாத்தாள் வெளியான தகவலை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது.
மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கோடை காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு நடைபெறுவது எழுதப்படாத விதியாகி விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாகவும், விவசாயப் பணிகளும், குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா தொடுத்த வழக்கில் E.D., CBI.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பாக 7ஆம் தேதி நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜர்படுத்தக்கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், E.D., CBI பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் புதிய ஜெர்ஸி என்று வெளியான புகைப்படம் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வழக்கமாக முழுவதும் நீல வண்ணத்துடன் ஜெர்ஸி இருந்து வரும் நிலையில், அந்த ஜெர்ஸி காவி மற்றும் நீல வண்ணத்துடன் காணப்படுகிறது. இதிலும் காவி நிறமா? என்று சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், புதிய ஜெர்ஸி சூப்பராக உள்ளதாக சிலர் பாராட்டி வருகிறார்கள். ஜெர்ஸி தொடர்பாக BCCI எந்த தகவலும் வெளியிடவில்லை.
நிலத்தை ஏமாற்றி விற்றதாக நடிகை கௌதமி போலீசில் புகார் அளித்துள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், முதுகுளத்தூர் பகுதியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி நடிகை கௌதமியிடம் ரூ.3 கோடி பெற்றுள்ளார். ஆனால், விற்க, வாங்க செபி தடையாணை பெற்ற நிலத்தை வெறும் ரூ.57 லட்சத்துக்கு வாங்கி தன்னிடம் ஏமாற்றி விற்றதாக, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
’கோவிஷீல்டு’ தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்தது. மருந்தை தயாரித்த சீரம் நிறுவனம், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதை உறுதி செய்தது. இந்நிலையில், இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.
சந்தானம் புதிதாக நடித்துள்ள இங்கு நான் தான் கிங்கு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ள அந்தப் படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, முனிஸ் காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்தப் படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) மறுப்புத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 4,750 மையங்களில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் இளநிலை தேர்வு நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, அந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது, அதில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வாரநாள்களில் 50%, வார இறுதி நாள்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால், வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, 25% மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால், ரயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுவதால், கழிவறை உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.