India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் முன்னாள் எம்.பி சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்ததை வெளிப்படையாக எதிர்த்து வந்த அவர், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார். இதனால், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட அவர், தற்போது 6 ஆண்டுகாலம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி மற்றும் சிசிடிவி பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு எதிராக 18 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2ஆவது முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாணப் பத்திரத்தில் தன்மீது 18 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார். இதில், பிரதமர் மோடி பெயர் குறித்து விமர்சித்த வழக்கும் ஒன்று என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
2026-இல் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி என்பது தான் பாமகவின் இலக்கு என அன்புமணி தெரிவித்துள்ளார். 57 ஆண்டுகளாக இக்கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டதாக கூறிய அவர், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி அதை சரிசெய்யும் என்றார். மேலும் பேசிய அவர், பாமக வாக்குகள்தான் தமிழ்நாட்டில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அதை இந்த தேர்தலில் மீண்டும் உறுதி செய்வோம் என்றும் அவர் கூறினார்.
விஜய் நடித்த ப்ளாக் பஸ்டர் படமான கில்லி ஏப்.20 தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே கில்லி படம் படைத்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக முதல் வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படம் என்ற எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தின் ரெக்கார்டை முறியடித்தது. மேலும், ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்படம் என்ற சாதனையை படைத்தது. கில்லி-க்கு முன்பு வரை ரஜினியின் படையப்பா படமே வசூலில் முதலிடத்தில் இருந்தது.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவில் பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பெரும் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் பூத் சிலிப் வைத்து தான் பலரும் வாக்கு செலுத்தினர். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்; வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 28% அதிகரித்துள்ளது. வயநாடு தொகுதியில் 2ஆவது முறையாக போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ₹20.4 கோடி சொத்துகள் இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ₹5 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கையில் ரொக்கமாக ₹55,000, 2 வங்கி கணக்குகளில் ₹ 26 லட்சம் இருப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ஒரு அரசியல் பச்சோந்தி என முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் விமர்சித்துள்ளார். இடத்திற்கு இடம் பச்சோந்தி நிறம் மாறுவதை போல் தேர்தலுக்கு தேர்தல் பாமக கூட்டணி மாறும் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவை குறைகூற எந்த அருகதையும் இல்லாதவர் அன்புமணி என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் மட்டும் அல்ல, 2026 பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து மோகன்லால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத அந்த படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது, கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.