News April 4, 2024

உலகின் மிக வயதான மனிதர் காலமானார்

image

உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) மரணமடைந்துள்ளார். ஜுவான் 1909 மே 27-இல் பிறந்தார். இவர், 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022, பிப். 4 அன்று உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை அமைப்பு அவரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

News April 4, 2024

பெண்களுக்கு செம அறிவிப்பு வெளியாகிறது

image

மக்களவைத் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடுகிறது. இதில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் சிறப்பு உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு ₹1 லட்சம் ஊக்கத் தொகையுடன் ஒரு வருட தொழிற்பயிற்சி, விவசாயிகளுக்கான (3 மாதத்திற்கு ₹2000) உதவித்தொகையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன.

News April 4, 2024

மேரேஜ் பத்தி மட்டும் கேட்காதீங்க…

image

திருமணத்தை பற்றி கேட்டால் தனக்கு பிடிக்காது என நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார். பேய் படங்களை பார்க்க விரும்புவதை போல், அவற்றில் நடிக்க மிகவும் விரும்புவதாக தெரிவித்த அவர், அரண்மனை 4 படம் அந்த அனுபவத்தை நிறைவாக தந்ததாக கூறினார். மேலும் பேசிய அவர், படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்து, அதற்கேற்ப முன்கூட்டியே தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

News April 4, 2024

சனாதனத்தை எதிர்த்த போது காங். மெளனம் காத்தது

image

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளரான கவுரவ் வல்லப், திடீரென கட்சியில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர், I.N.D.I.A கூட்டணியில் சில பெரிய தலைவர்கள் சனாதனத்தை எதிர்த்த போது, காங்கிரஸ் தலைமை மௌனம் காத்தது தன்னை பெரிதும் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும், ராமர் கோயில் குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார்.

News April 4, 2024

தமிழ் நடிகை கவலைக்கிடம்

image

சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் உறைந்ததால், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி ஆர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ₹2 லட்சம் வீதம் இதுவரை ₹40 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாம்.

News April 4, 2024

பாஜக ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம்

image

பாஜகவை திமுக போட்டியாக கருதவில்லை என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை தான் திமுக எதிர்க்கட்சியாக பார்க்கிறது. ஆனால், அந்த தகுதியுடன் அவர்கள் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய கனிமொழி, பாஜக என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புயல், மழைக்கு வராத பிரதமர் மோடி, வாக்குகளை வாங்குவதற்கு மட்டும் வருவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

News April 4, 2024

மும்பையில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?

image

IPL-2024 சீசனுக்கு பிறகு ரோஹித் ஷர்மா MI அணியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித்துக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதற்கிடையில் ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடக செய்திகள் கூறுகின்றன. MI-லிருந்து விலகும் அவர், அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.

News April 4, 2024

பேண்ட் எய்ட்டுகளால் புற்றுநோய் ஆபத்து

image

காயங்களுக்கு பேண்ட் எய்ட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று எச்சரிக்கிறது. ரத்த காயத்துக்கு உடனடியாக பேண்ட் எய்ட் பயன்படுத்தும் வழக்கம் அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில், பேண்ட் எய்ட்டுகளில் ஆர்கனிக் ஃப்ளோரின் என்ற ரசாயனம் அதிகம் இருப்பதாகவும், இதனால் அதை பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

News April 4, 2024

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

image

தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ளார். நாளை காலை சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து வாகனப் பேரணியில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக தென்காசி செல்லும் அவர், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். முன்னதாக நேற்று அமித்ஷா வருவதாக இருந்த நிலையில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

News April 4, 2024

ஒரே ஆண்டில் ரூ.17,545 கோடியிலிருந்து ‘பூஜ்யம்’

image

பைஜூ அதிபர் ரவீந்திரனின் சொத்து ஒரே ஆண்டில் ரூ.17,545 கோடியில் இருந்து பூஜ்யமாகியுள்ளது. 2011இல் தொடங்கப்பட்ட பைஜூ செயலி மூலம் தொடக்க கல்வி முதல் எம்பிஏ வரை பயிற்சி அளிக்கப்பட்டது. 2022இல் பைஜூ மதிப்பு 22 பில்லியன் டாலராகவும், ஓராண்டுக்கு முன்பு ரவீந்திரனின் சொத்து ரூ.17,545 கோடியாகவும் மதிப்பிடப்பட்டது. ஆனால் 2024 போர்ப்ஸ் பட்டியலில் அவரின் சொத்து பூஜ்யம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!