India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகன் ஷிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அம்மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தனித்து போட்டியிடுகிறார். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற தன்னை சந்திக்க அமித்ஷா மறுத்துவிட்டதாக ஈஸ்வரப்பா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த மக்களவைத் தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையின்கீழ் போட்டியிட்ட அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அப்போது அக்கட்சியில் இருந்த ஓபிஎஸ், இந்த முறை பாஜக அணியில் சுயேச்சையாகவும், டிடிவி தினகரன், பாஜக அணியிலும் போட்டியிடுகின்றனர். ஓபிஎஸ் விலகலால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா, இல்லையா என்பதை தேர்தல் முடிவே தெரியப்படுத்தும்.
உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) மரணமடைந்துள்ளார். ஜுவான் 1909 மே 27-இல் பிறந்தார். இவர், 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022, பிப். 4 அன்று உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை அமைப்பு அவரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடுகிறது. இதில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் சிறப்பு உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு ₹1 லட்சம் ஊக்கத் தொகையுடன் ஒரு வருட தொழிற்பயிற்சி, விவசாயிகளுக்கான (3 மாதத்திற்கு ₹2000) உதவித்தொகையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன.
திருமணத்தை பற்றி கேட்டால் தனக்கு பிடிக்காது என நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார். பேய் படங்களை பார்க்க விரும்புவதை போல், அவற்றில் நடிக்க மிகவும் விரும்புவதாக தெரிவித்த அவர், அரண்மனை 4 படம் அந்த அனுபவத்தை நிறைவாக தந்ததாக கூறினார். மேலும் பேசிய அவர், படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்து, அதற்கேற்ப முன்கூட்டியே தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளரான கவுரவ் வல்லப், திடீரென கட்சியில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர், I.N.D.I.A கூட்டணியில் சில பெரிய தலைவர்கள் சனாதனத்தை எதிர்த்த போது, காங்கிரஸ் தலைமை மௌனம் காத்தது தன்னை பெரிதும் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும், ராமர் கோயில் குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார்.
சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் உறைந்ததால், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி ஆர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ₹2 லட்சம் வீதம் இதுவரை ₹40 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாம்.
பாஜகவை திமுக போட்டியாக கருதவில்லை என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை தான் திமுக எதிர்க்கட்சியாக பார்க்கிறது. ஆனால், அந்த தகுதியுடன் அவர்கள் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய கனிமொழி, பாஜக என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புயல், மழைக்கு வராத பிரதமர் மோடி, வாக்குகளை வாங்குவதற்கு மட்டும் வருவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
IPL-2024 சீசனுக்கு பிறகு ரோஹித் ஷர்மா MI அணியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித்துக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதற்கிடையில் ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடக செய்திகள் கூறுகின்றன. MI-லிருந்து விலகும் அவர், அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.
காயங்களுக்கு பேண்ட் எய்ட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று எச்சரிக்கிறது. ரத்த காயத்துக்கு உடனடியாக பேண்ட் எய்ட் பயன்படுத்தும் வழக்கம் அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில், பேண்ட் எய்ட்டுகளில் ஆர்கனிக் ஃப்ளோரின் என்ற ரசாயனம் அதிகம் இருப்பதாகவும், இதனால் அதை பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
Sorry, no posts matched your criteria.