India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரட்டை இலை சின்னம் பலவீனமாகி வருவது இந்த மக்களவைத் தேர்தலில் தெரியவரும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் பி.எஸ்.வீரப்பாவிடமோ, நம்பியாரிடமோ இருந்தால் எப்படியோ, அப்படிதான் மக்கள் பார்ப்பதாக கூறினார். மேலும் தானும், ஓபிஎஸ்ஸும் இணைந்திருப்பதே எம்ஜிஆரின் இயக்கத்தை மீட்டு உண்மையான தொண்டர்களிடம் அதிமுகவை ஒப்படைப்பதற்காகத் தான் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நாளை ஒரே நாளில் ஏழு படங்கள் ரீலிஸ் செய்யப்பட உள்ளன. இரவின் கண்கள், ஆலகாலம், ஒரு தவறு செய்தால், டபுள் டக்கர், வல்லவன் வகுத்ததடா, கயல் ஆனந்தி நடித்த ஒயிட் ரோஸ் ஆகிய 6 நேரடி தமிழ் படங்களும், விஜய் தேவரகொண்டாவின் தி ஃபேமலி ஸ்டார் படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாக உள்ளன. முன்னதாக ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா நடிப்பில் கள்வன் திரைப்படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
அக்னி பிரைம் ஏவுகணையை இரவு நேரத்தில் இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. 2,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் அடுத்த தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை நேற்றிரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து விஞ்ஞானிகள் சோதித்தனர். அந்த ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 16ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஏடிஎம்களில் பணம் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல், மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உங்கள் பகுதியில் உள்ள ஏடிஎம்களில் பணம் கிடைக்கிறதா என கமெண்டில் கூறலாம்.
வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 925 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் ஏப்.6, 7இல் (சனி, ஞாயிறு) கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in தளம் மற்றும் TNSTC செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 11,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
வடிவேலுவுக்கு அரசியல் யோகம் அறவே இல்லை என நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார். அரசியலில் வடிவேல் கால் வைக்கிற இடமெல்லாம் தோல்வி தான் மிஞ்சியது என விமர்சித்த அவர், தனக்கு அரசியல் ராசியில்லை என முடிவுசெய்து வடிவேலுவே அரசியலில் இருந்து விலகியதாவும் தெரிவித்தார். முன்னதாக அரசியல் என்பதே தனக்கு பழங்கதையாகி விட்டதால், இனி நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என வடிவேல் தெரிவித்திருந்தார்.
நாட்டின் பெயருக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உலக அரங்கில் நாட்டின் பெயருக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.
விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த ராதாகிருஷ்ணனும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, நேற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், ராதாகிருஷ்ணன் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 435.85 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மின் நுகர்வு 430.13 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், நேற்று புதிய உச்சம் தொட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டாலும் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல் உள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். அப்பாவி மக்களின் பணத்தை கைப்பற்றும் தேர்தல் ஆணையம், வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில்லை என குற்றம் சாட்டிய அவர், தொழில்நுட்பம் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்குச் சீட்டு முறைதான் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.