India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எவ்வளவு முயன்றாலும் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதால்தான் அமித்ஷாவின் தமிழக சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தேனி பிரசாரத்தில் பேசிய அவர், தமிழகத்தை கண்டாலே பாஜகவினருக்கு பிடிப்பதில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தை எட்டிக் கூட பார்க்காத பிரதமர் மோடி தற்போது அடிக்கடி வருவதற்கு தேர்தல் தான் காரணம் எனவும் அவர் கூறினார்.
நடிகை ஸ்ரீதேவி இயற்கை மரணம் அடையவில்லை என்று கணவர் போனி கபூர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு துபாய் ஹோட்டல் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மூழ்கி உயிரிழந்தார். டயட் காரணமாக ஸ்ரீதேவி உணவில் உப்பை சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் இதனால் அடிக்கடி அவருக்கு மயக்கம் வருவது உண்டு என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஸ்ரீதேவி மரணத்தின் உண்மை காரணம் வெளிவந்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது குஜராத் அணி. அகமதாபாத் மைதானத்தில் முதலில் விளையாடிய GT அணி 199/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 89 (48), சாய் சுதர்சன் 33 (19), கேன் வில்லியம்சன் 26 (22), ராகுல் திவாட்டியா 23 (8) ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ரபாடா 2, ப்ரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந் நிலையில், ஈரோட்டில் அதிகபட்சமாக இன்று 41.11 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி F) வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல, கரூர், சேலம், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூரில் 40 டிகிரி செல்சியஸ், திருத்தணி, மதுரை, வேலூர், நாமக்கல்லில் 39.44 டிகிரி செல்சியஸ், கோவை, தஞ்சையில் 38.33 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் ஷுப்மன் கில் அரை சதம் விளாசி அசத்தியுள்ளார். அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரர் கில் அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போதுவரை அவர் 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்துள்ளார். குஜராத் அணி தற்போதுவரை 18 ஓவர்களில் 166/4 ரன்கள் எடுத்துள்ளது.
வரும் தேர்தலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் நாராயணன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர்களது பொதுக்குழு உறுப்பினர்களிடம் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் அதில் 99% பேர் பாஜகவுக்கு ஆதரவளிக்க சொன்னதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். மோடியின் ஆட்சியில் இந்தியா வல்லரசாக திகழும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பறிக்க மும்பை அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலுமே MI அணி தோல்வியை தழுவியது. இதற்கு ஹர்திக்-ரோஹித் இடையிலான பிரச்னையே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளின் முடிவைப் பொறுத்து MI அணியின் செயல்பாடு மாறலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆவுடையப்பன். அவரது அலுவலகத்தில் பணப் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என கஸ்டமர் கேர் எண்ணிற்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு முதலில் ரூ.35 ஆயிரம் மாயமானது. அதனை மீட்க மீண்டும் முயற்சிக்கவே ரூ.3 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளார். இதனை அவரது மகன் வீடியோ மூலம் வெளியில் கொண்டு வந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம், வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.