India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திரிணாமுல் காங்., வேட்பாளர் மிதாலி பாக் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது கார் கண்ணாடி சேதமடைந்த நிலையில், பாஜகவினர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து மேற்கு வங்க பாஜகவினர் மீது திரிணாமுல் காங்., கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான ‘மனசித்திரதாழு’ படத்தை தான் 50 முறை பார்த்ததாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். இது பாசிலின் கிளாசிக்கல் படம் என்ற அவர், ஷோபனா தனது சிறப்பான நடிப்பால் தேசிய விருது வாங்கினார் எனப் புகழ்ந்துள்ளார். மேலும், மோகன்லாலின் நடிப்பையும் புகழ்ந்து பேசியுள்ளார். இந்தப் படம் பின்னாளில் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் வெளியானது.
இன்று (மே 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
* நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.
* இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
* மறைந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
➤எடை குறைப்புக்காக காலை உணவை தவிர்க்கக் கூடாது. ➤காலை உணவை தவிர்ப்பதால் கவனக்குறைவு ஏற்படும். ➤காலை உணவாக துரித உணவுகளை சாப்பிடக் கூடாது. ➤பழங்கள், பழச்சாறுகளை காலையில் சாப்பிடுவது சிறப்பு ➤ இனிப்பான உணவை தவிர்ப்பது நல்லது. ➤ ஆவியில் வேகவைத்த இட்லி, காலையில் பொருத்தமான உணவாக இருக்கும். ➤ அதேபோல, சிறுதானிய உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
சமையலில் உருளைக் கிழங்கை தொடர்ந்து சேர்த்தால் சில பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. உருளையை சமையலில் அதிகம் சேர்த்தால் பொட்டாசியம் அதிகரித்து, சிறுநீரக பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். உடலில் வாயுத் தொல்லை, ஒவ்வாமை, கீழ்வாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால், அளவோடு சேர்த்து பயனடைவோம்.
லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த KKR அணி 235/6 ரன்கள் எடுத்து. பின்னர் 236 ரன்கள் இலக்கை விரட்டி ஆடிய LSG 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. KKR தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வரும் சக்ரவர்த்தி, ரானா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
கோடை விடுமுறையில் மக்கள் வெளியூர் செல்வதை பயன்படுத்தி, வீட்டுக்கதவை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டுவது ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து வருகிறது. இதை கீழ்காணும் யோசனைகளைக் கடைபிடித்தால் தவிர்க்கலாம் * இரட்டை பூட்டு முறையை கடைபிடித்தல் * கேட்டில் உள்பக்கமாக பூட்டு போடுதல் * பூட்டு உடைக்கப்பட்டால் சத்தம் வரும் வகையில் அலாரம் * அபாய ஒலி எழுப்பும் சிசிடிவி கேமராக்கள் *நாய்கள் வளர்த்தல்
ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக 1,115 நாள்களுக்கு பிறகு, சென்னை அணி வென்றுள்ளது. 2021இல் கடைசியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை வீழ்த்தியிருந்தது. அதன் பிறகு, 2 ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணியை வெற்றி கொள்ளாமல் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் வென்றுள்ளது. இந்த இடைபட்ட ஆண்டுகளில், 5 முறை பஞ்சாப் தொடர்ந்து சென்னையை வென்றது.
*மேஷம் – அமைதியாக இருக்க வேண்டும்
*ரிஷபம் – நினைத்து நிறைவேறும்
*மிதுனம் – மனதில் தெளிவு உண்டாகும்
*கடகம் – கூடுதல் சுமை ஏற்படும்
*சிம்மம் – அதிருப்தி நிலவும்
*கன்னி – சாதகமான நாள்
*துலாம் – கவனம் தேவை
*விருச்சிகம் – முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்
*தனுசு – நிதானமாக செயல்படவும்
*மகரம் – லாபகரமான நாள் *கும்பம் – வாய்ப்புகளை இழக்க நேரிடும் *மீனம் – தடைகள் உண்டாகும்
Sorry, no posts matched your criteria.