News April 5, 2024

செயற்கை சூரியனை உருவாக்கிய தென்கொரியா

image

தென்கொரிய விஞ்ஞானிகள், அணுக்கரு இணைவு ஆய்வு மூலம் KSTAR என்ற செயற்கை சூரியன் கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கடந்த 2023 டிசம்பரிலும், கடந்த பிப்ரவரி மாதத்திலும் அவர்கள் அக்கருவியை பரிசோதித்தனர். அப்போது 48 வினாடிகளுக்கு அந்தக் கருவி, 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் பிளாஸ்மா வெப்பத்தை உருவாக்கியது. இது விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

News April 5, 2024

இன்றைய போட்டியில் CSK வீரர் விலகல்

image

நடப்பு IPL சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள CSKவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய விசா தொடர்பாக அவர் வங்கதேசம் திரும்புவதால், SRH-க்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்சனா அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

News April 5, 2024

இவ்வளவு பணத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள்

image

அரசியல் கட்சிகள் வருமான வரியே கட்டத் தேவையில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மயிலையில் பேசிய அவர், கட்சிகள் வருமான வரி கட்ட வேண்டாம் என்ற விதி இருந்தும், காங்கிரஸ் கட்சி ரூ.3,822 கோடி வரி கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், ரூ.11 கோடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள் என விமர்சித்தார்.

News April 5, 2024

திமுக அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

image

நெல்லை அருகே உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். பாளை.யில் உள்ள திமுக அலுவலத்தில் ஆவுடையப்பன் தலைமையில் நேற்றிரவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது திடீரென அங்கு வந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆவுடையப்பன் இதனை மறுத்துள்ளார்.

News April 5, 2024

வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி

image

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கூடுதலாக 10,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த மாதம் 1ஆம் தேதி 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்திருந்த நிலையில், கூடுதலாக 10,000 டன் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்து வருகிறது.

News April 5, 2024

நேதாஜியை நாட்டின் முதல் பிரதமர் என்ற கங்கனா

image

நேதாஜியை இந்தியாவின் முதல் பிரதமர் என்று மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா கூறியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நாடு சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் முதல் பிரதமரான நேதாஜி எங்கு சென்றார் என தவறாக கேள்வியெழுப்பினார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் கங்கனாவை IQ 110 என்று விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

News April 5, 2024

இந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்

image

தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா கருத்து சொல்ல தேவையில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நம்புவதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறியிருந்தார். இதற்கு தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அது குறித்து ஐ.நா கவலைப்படத் தேவையில்லை என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

News April 5, 2024

ஐபிஎல் ஆரஞ்ச் நிற தொப்பி: கோலி தொடர்ந்து முதலிடம்

image

ஐபிஎல் ஆரஞ்ச் நிற தொப்பியை வெல்லும் வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி வீரர் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் 203 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு பிறகு 2வது இடத்தில் 181 ரன்கள் குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கும், 3வது இடத்தில் 167 ரன்கள் எடுத்துள்ள ஹைதராபாத் வீரர் கிளாசன் உள்ளனர். குஜராத் வீரர் ஷூப்மன் கில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News April 5, 2024

சோதனைகள் மூலம் எங்களை மிரட்ட முடியாது

image

சோதனை மூலம் திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகிகளை சோதனை மூலம் முடக்கிவிட்டால், தேர்தலில் ஆதாயம் அடையலாம் என சிலர் நினைக்கிறார்கள் என்று விமர்சித்த அவர், திமுக எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் இதற்கெல்லாம் அஞ்சாது என சூளுரைத்தார். முன்னதாக நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் அலுவலத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

News April 5, 2024

Pay PM விலைப்பட்டியலை வெளியிட்ட பிரசாந்த் பூஷன்

image

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் என்ற கேள்வியுடன் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில Pay PM விலைப்பட்டியலை பகிர்ந்து விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தப்பிக்க Just ₹56 கோடி மட்டுமே, குண்டும் குழியுமாக ரோடு போட தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தம் எடுக்க ₹176 கோடி மட்டுமே என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!