India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் ஐ.டி., துறையில் காலியாக உள்ள சீனியர் மற்றும் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்படையுமென முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், பொருளாதார நிலைத்தன்மை, வளர்ச்சிக்கான வாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்குமென்பதால், இது வேலைவாய்ப்பு சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
H5N1 என்ற கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவத் தொடங்கியிருக்கிறது. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வகை வைரஸ், கொரோனாவை விட 100 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பறவைகள் மற்றும் கால் நடைகளை இதுவரை பாதித்து வந்த H5N1 வைரஸ், முதல் முறையாக அமெரிக்காவில் விவசாயி ஒருவரை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆளுநர் அல்லது மத்திய அமைச்சர் ஆகும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிடம் எந்த பொறுப்பையும் தான் கேட்டுப்பெற்றதில்லை, இனியும் யாரிடமும் எந்த பதவியையும் கேட்டுப் பெற மாட்டேன் எனக் கூறினார். அதிமுக கட்சி விதிப்படி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் இரட்டை இலை சின்னம் தனக்கே கிடைக்கும் என்ற அவர், தேர்தலுக்கு பிறகு அதிமுக நிச்சயம் இணையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தோல்வியில் தத்தளிக்கும் அக்கட்சியை கரை சேர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு காலத்தில் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தற்போது 3 மாநிலங்களாக சுருங்கியுள்ளது. கல்விக் கடன் ரத்து, இட ஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அதிரடி ஆட்டக்காரர் மில்லர், காயம் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனக் கூறப்படுவதால், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2024 ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 44 ரன்களும், சிஎஸ்கேக்கு எதிராக 21 ரன்களும் மில்லர் குவித்தார். ஆனால் காயம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் விளையாடவில்லை. அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் விளையாடினார்.
இரட்டை இலை சின்னம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல முறை முயன்று தோற்ற பின்னரும் அவருடைய நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டது. ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னத்தை கொடுத்துவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையிலும் ஓபிஎஸ் போராடி வருகிறார்.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் களம் கண்ட ஸ்மிருதி இரானி, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்தார். இந்நிலையில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏப். 9 முதல் 21 வரை ஆகிய 13 நாட்கள் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக மாணவர்/ ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.8ஆம் தேதி அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். ஏப்.9 முதல் 21 வரை ஆசிரியர், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏப்.22, 23இல் விடுபட்ட தேர்வு நடைபெறும். ஏப்.22 – 26 வரை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடும் போது அதை ஆன்லைனில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடியில் வாங்கலாம். மற்ற நேரங்களில் டீமேட் கணக்கு இருந்தால் Secondary Market மூலம் தள்ளுபடி விலையில் தங்கம் வாங்கலாம். 24 கேரட் தங்கம் இன்று ரூ.6,990 ஆக இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி Secondary Market-இல் ரூ.6,765க்கு விற்பனையாகிறது.
முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், முத்தலாக் முறையானது முஸ்லிம் மதத்தை சேர்ந்த தாய்மார்கள், சகோதரிகளின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்து அவர்களை மட்டுமன்றி முஸ்லிம் குடும்பங்களையும் தான் காத்துள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.